Home /News /trichy /

காவிரியில் வெள்ளம்... திருச்சியில் தரைப்பாலம், வாழைகள் மூழ்கின...

காவிரியில் வெள்ளம்... திருச்சியில் தரைப்பாலம், வாழைகள் மூழ்கின...

திருச்சியில் வெள்ளப்பெருக்கு- காவிரி கரையோரம் நெல் வாழை சேதம்

திருச்சியில் வெள்ளப்பெருக்கு- காவிரி கரையோரம் நெல் வாழை சேதம்

Trichy Cauvery Flood | காவிரியில் பெருகி வரும் வெள்ளம் காரணமாக, திருச்சியை அடுத்த கல்லணை அருகேயுள்ள தரைப்பாலம், வயல்கள் மூழ்கியுள்ளன.

திருச்சி முக்கொம்பு மேலணைக்கு, ஒரு லட்சத்து 38, 186 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. இதில் 53, 187 கன அடி  தண்ணீர் காவிரியிலும், 83,073 கன அடி கொள்ளிடம் ஆற்றிலும்  திறக்கப்பட்டுள்ளது. காவிரியில் பெருகி வரும் வெள்ளம் காரணமாக, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை மூடப்பட்டுள்ளது. பொது மக்கள் திதி, தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் காவிரி, கொள்ளிடம் படித்துறைகளில் குளிக்க வேண்டாம்; கால்நடைகளை அழைத்துச் செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், காவிரியில் பெருகி வரும் வெள்ளம் காரணமாக, திருச்சியை அடுத்த கல்லணை அருகேயுள்ள உத்தமர்சீலி தரைப்பாலம் மூழ்கியுள்ளது. காவிரி வெள்ள நீர் தரைப்பாலம் வழியாக வழிந்து, கொள்ளிடம் ஆற்றுக்கு செல்கிறது.

நீரின் வேகம் அதிகமாக இருப்பதால், கல்லணை - திருக்காட்டுப்பள்ளி- தஞ்சை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், திருவளர்சோலை, பனையபுரம், உத்தமர்சீலி, கிளிக்கூடு ஆகிய கிராமங்களில் காவிரிக்கரையை ஒட்டியுள்ள வாழை உள்ளிட்ட பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

Also see... கொடைக்கானல் அடுக்கம் பெரியகுளம் மலைச்சாலையில் மண்சரிவு

மேட்டூர் அணையில் இன்று, 2 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாலும், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாகவும், தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, திருச்சி மாவட்டத்தில் காவிரி, கொள்ளிட கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வருவாய்த் துறை, நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தாழ்வான பகுதிகளை கண்காணித்து வருகின்றனர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Cauvery River, Flood, Kallanai, Trichy

அடுத்த செய்தி