முகப்பு /செய்தி /திருச்சி / மணப்பாறை ஜல்லிக்கட்டுப் போட்டி : சீறிய காளைகளை அடக்கி பரிசுகளை அள்ளி சென்ற வீரர்கள்!

மணப்பாறை ஜல்லிக்கட்டுப் போட்டி : சீறிய காளைகளை அடக்கி பரிசுகளை அள்ளி சென்ற வீரர்கள்!

கருங்குளம் ஜல்லிகட்டு

கருங்குளம் ஜல்லிகட்டு

Trichy Manapari Jallikattu | தங்கம் மற்றும் வெள்ளிக் காசுகள், பீரோ, சைக்கிள், கட்டில், கிரைண்டர் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை வீரர்கள் அள்ளிச் சென்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli, India

மணப்பாறை அருகே நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் சீறி வரும் காளைகளை அடக்கி, மாடுபிடி வீரர்கள் பரிசுப் பொருட்களை அள்ளிச் செல்கின்றனர்.

திருச்சி மாவட்டம் கருங்குளத்தில் உள்ள புனித வனத்து அந்தோணியார் கோயில் விழாவை ஒட்டி ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படுகிறது. போட்டியை, ஶ்ரீரங்கம் கோட்டாட்சியர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், களமாட 700 காளைகள் காத்திருக்கின்றன. அவற்றை அடக்குவதற்கு, ஒரு சுற்றுக்கு 25 வீரர்கள் வீதம் மொத்தம் 300 வீரர்கள் களம் காணுகின்றனர்.

முதலில் கோயில் காளைகள் அவிழ்க்கப்பட்டதை தொடர்ந்து, வாடிவாசல் வழியாக அடுத்தடுத்து காளைகள் சீறிப் பாய்ந்தன. ஆக்ரோஷமாக வந்த காளைகளை வீரர்கள் தீரத்துடன் செயல்பட்டு அடக்கி, தங்கம் மற்றும் வெள்ளிக் காசுகள், பீரோ, சைக்கிள், கட்டில், கிரைண்டர் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை அள்ளிச் சென்றனர்.

அதேவேளையில் களத்தில் நின்று விளையாடிய சில காளைகள், வீரர்களை மிரட்டின. அருகில் நெருங்க கூட முடியாத அளவிற்கு அச்சுறுத்தியவாற பாய்ந்து சென்றன. சிறப்பாக விளையாடி காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

First published:

Tags: Jallikattu, Local News, Trichy