Home /News /trichy /

சைகை மொழியில் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்

சைகை மொழியில் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்

மாற்றுத்திறனாளிகள்

மாற்றுத்திறனாளிகள்

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பு சார்பில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, மாற்றுத்திறனாளிகள் சைகை மொழியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காதுகேளாதோருக்கு மாதாந்திர உதவித்தொகை 1000 ரூபாய் வருவாய் துறை மூலம் வழங்கப்படுகிறது. இதை பெறுவதற்கு வருவாய்துறையினர் அவர்களை அலைக்கழிப்பதாக கூறப்படுகிறது. எனவே, காதுகேளாதோருக்கு மாதாந்திர உதவித்தொகையை , 3,000 ரூபாயாக உயர்த்தி, அத்தொகையை மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்க வேண்டும்.

அரசு, தனியார் வேலை வாய்ப்புகளில் ஒரு சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளி வாரிசுகளுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பு சார்பில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன், ஒருங்கிணைப்பாளர் அகிலா ஆகியோர் போராட்டத்தை நெறிப்படுத்தினர். 50க்கும் மேற்பட்ட காதுகேளாதோர் பங்கேற்றனர். காத்திருப்பு போராட்டத்தை கைவிட வலியுறுத்திய காவல்துறையினர், காதுகேளாதோர் சங்க பிரதிநிதிகளை மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமியிடம் அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: கோவில் சொத்துகள் மூலம் வரும் வருவாயை முறையாக வசூலித்தால் தமிழக அரசு பற்றாக்குறை இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யலாம் - உயர் நீதிமன்றம்

அவர்களது கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட அபிராமி, 'விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்று உறுதியளித்தன் பேரில், காதுகேளாதோர்  போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனர்.

*நூதனம்*

பொதுவாக போராட்டம், ஆர்ப்பாட்டம் என்றால் ஒருவர் மைக்கை பிடித்து கண்டன கோஷங்களை முழங்க, மற்றவர்கள் அதை திரும்ப கூறுவார்கள். அதீத சத்தம், அடங்காத இரைச்சல் என்று அந்தப் பகுதியே ஒரே பரபரப்பாக இருக்கும். ஆனால் காதுகேளாதோர் போராட்டத்தில் எல்லாமே தலைகீழாக இருந்தது.

போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் அமைதியாக அமர்ந்திருக்க, இருவர் கோரிக்கைகளை விளக்குவதற்காக நின்றிருந்தனர். அவர்கள் இருவரும் தங்களது கோரிக்கைகளை ஒவ்வொன்றாக சைகை மொழியில் விவரிக்க, எதிரே இருந்தவர்கள் பதாகைகளை ஆட்டியும், கைகளை உயர்த்தியும் ஆமோதித்தனர்.
இதையும் படிக்க: தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக தேனியை சேர்ந்த ஏ.சேர்மராஜன் பதவியேற்பு..
இங்கு, அதிகபட்ச சத்தம் என்பது அவர்கள் வாயில் வைத்து ஊதிய விசில் சத்தம் தான். அதையும் கோரிக்கைகளை உறுதியாக ஆமோதிப்பதை தெரிவிக்கும் வகையில் ஊதினர். இதுபோன்ற போராட்டத்தை கண்டு பழக்கம் இல்லாத திருச்சி மாநகர மக்களுக்கு இப்போராட்டம் ஒரு புதுவித அனுபவமாக இருந்தது.
இப்போராட்டத்தை கண்டு  வியந்த  பொதுமக்கள், அவர்கள் கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் நிறைவேற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர்.
Published by:Murugesh M
First published:

Tags: Protest, Trichy

அடுத்த செய்தி