தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா வேம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனசேகரன் பாண்டியன். அவருக்கு வயது 37. இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவிக்கு சொந்த ஊர், திருச்சி அருகே உள்ள குண்டூர் ராகவேந்திரா நகர்.
இந்நிலையல், கடந்த, 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் விடுமுறையில் மனைவியின் சொந்த ஊருக்கு வந்து தங்கினார். அந்த ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி, தனது மனைவியின் இருசக்கர வாகனத்தை, திருச்சி- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டிச் சென்றார்.
அப்போது, அந்த வழியாக சென்ற அரசுப் பேருந்து அவரின் இருசக்கர வாகனத்தில் மோதியது. அந்த விபத்தில் தனசேகரன் பாண்டியன் தனது வலது காலை இழந்தார். இது குறித்து நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே வலது காலை இழந்த தனசேகரன் பாண்டியன் ராணுவப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். அதையடுத்து, வலது காலை இழந்ததுடன், பணியையும் இழந்த தனக்கு நஷ்ட ஈடு கேட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மீது வழக்கு தொடர்ந்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்த வழக்கை விசாரித்த, திருச்சி மூன்றாவது கூடுதல் சார்பு நீதிபதி சோமசுந்தரம், பாதிக்கப்பட்ட ராணுவ வீரருக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், 1,67,84,020 ரூபாய் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட ராணுவ வீரர் தரப்பில் தரப்பில் வக்கீல் முத்து மாரியப்பன் ஆஜராகி வாதாடினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Accident, Bus accident, Compensation, Court, Trichy