ஹோம் /நியூஸ் /திருச்சி /

கத்தி முனையில் கணவன் மனைவியை கடத்தி சென்ற கும்பல்.. போலீசாரையே மிரட்டி தப்பியோட்டம்!

கத்தி முனையில் கணவன் மனைவியை கடத்தி சென்ற கும்பல்.. போலீசாரையே மிரட்டி தப்பியோட்டம்!

கடத்தப்பட்ட தம்பதியினர்

கடத்தப்பட்ட தம்பதியினர்

Trichy couples kidnap | தம்பதியினரை கடத்தி சென்ற கும்பலை மடக்கி பிடித்த போலீசாரை கத்தி காட்டி மிரட்டி தப்பி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli | Tiruchirappalli

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கணவன் - மனைவியை காரில் கடத்திச் சென்ற கும்பல், கத்தியைக் காட்டி மிரட்டி போலீசாரிடம் இருந்து தப்பிச் சென்றுள்ளது

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த ஆபிசர்ஸ் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் பழனியப்பன். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர், தனது மனைவியுடன் தொழில் நிமித்தமாக சென்னை சென்றுவிட்டு, காரில் ஊர் திரும்பியுள்ளார். திருச்சி அருகே மர்ம கும்பல் ஒன்று காரை வழிமறித்து, இருவரையும் கடத்தியுள்ளது.

இதுதொடர்பாக பழனியப்பனின் மகன் மணப்பாறை காவலர்களுக்கு புகார் அளித்த நிலையில், அவர்கள் அந்த கும்பலை மடக்கினர். அப்போது கத்தியை காட்டி காவலர்களை மிரட்டிய கும்பல், 10 சவரன் நகை மற்றும் 40,000 ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு தம்பதியை விட்டு சென்றனர்.

கடத்தலில் ஈடுபட்ட முதியவர் ஒருவரை கைது செய்த போலீசார், தப்பியோடிய 4 பேரை தீவிரமாக  தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பணத்திற்காக இருவரும் கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: ராமன், மணப்பாறை.

First published:

Tags: Crime News, Kidnap, Local News, Trichy