பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மீது ஜிஎஸ்டி வரி விதிப்பை கண்டித்து, நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் முன்பு, மாவட்டத் தலைவர் ஜவஹர் தலைமையில், 100க்கும் மேற்பட்ட காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து அனைவரும் பேரணியாக, திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைமையகமான அருணாச்சலம் மன்றத்திற்கு வந்தனர்.
அங்கு, பத்திரிக்கையாளர்களுக்கு யார் பேட்டி கொடுப்பது? என்ற பிரச்னை எழுந்தது. அதையடுத்து, மாவட்டத் தலைவர் ஜவஹர் மற்றும் மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றியதால் மாவட்டத் தலைவர் கோஷ்டியை சேர்ந்த ஒருவர், வக்கீல் சரவணனை தாக்க, ஒருவருக்கொருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டனர்.
இவர்களது கோஷ்டி மோதலால் கட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்படடது. ஆர்ப்பாட்டத்திற்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர், தகவலறிந்து காங்கிரஸ் அலுவலகம் விரைந்தனர்.
உள்ளே இருந்த அனைவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதன் காரணமாக காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் பிரச்சினைக்காக போராட்டம் நடத்திய காங்கிரசார், தங்களது பிரச்னைக்காக அடித்துக் கொண்ட சம்பவம், எந்த கோஷ்டியையும் சேராத நடுநிலை காங்கிரசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காங்கிரஸ் சார்பில் டெல்லியில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தும் போராட்டத்தில், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் நகரத்திலிருந்து(திருச்சி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.