முகப்பு /செய்தி /திருச்சி / சீரமைக்கப்பட்ட திருச்சி காவிரி பாலம் திறப்பு : நிம்மதி பெருமூச்சு விட்ட வாகன ஓட்டிகள்

சீரமைக்கப்பட்ட திருச்சி காவிரி பாலம் திறப்பு : நிம்மதி பெருமூச்சு விட்ட வாகன ஓட்டிகள்

திருச்சி காவிரி பாலம் திறப்பு

திருச்சி காவிரி பாலம் திறப்பு

Trichy Cauvery Bridge Reopen | 45 ஆண்டுகள் பழமையான பாலத்தை சீரமைக்கும் வகையில் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி நடைபெற்று வந்தது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சியில் உள்ள காவிரிப் பாலத்தை போக்குவரத்து பயன்பாட்டிற்காக அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.

திருச்சியின் அடையாளங்களுள் ஒன்றாக காவிரிப் பாலம் திகழ்கிறது. இந்தப் பாலத்தில் பல்வேறு இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர். 540 மீட்டர் நீளம் மற்றும் 15 மீட்டர் அகலம் கொண்ட இப்பாலத்தை தாங்கி நிற்கும் தூண்களில் ஏற்பட்ட விரிசல் காரணமாக போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை உருவானது.

இதனால் 45 ஆண்டுகள் பழமையான பாலத்தை சீரமைக்கும் வகையில் கடந்த செப்டம்பர் மாதம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அத்துடன், காவிரி பாலத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனைக் கருத்தில் கொண்டு காவிரிப் பாலத்தை சீரமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தன.

அண்மையில், காவிரி பாலத்தில் தார் சாலை அமைக்கும் பணி நிறைவடைந்தது. இந்நிலையில், திருச்சி காவிரி மேம்பாலத்தை போக்குவரத்துக்கு அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், திருச்சி பாலம் திறக்கப்பட்டதன் மூலம் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், ஆட்சியர் பிரதீப் குமார், மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் : விஜயகோபால்

First published:

Tags: Cauvery River, Trichy