Home /News /trichy /

திருச்சி காவிரி பாலம் இன்று முதல் மூடல்.. போக்குவரத்து மாற்றம்.. மாற்று வழி என்ன..?

திருச்சி காவிரி பாலம் இன்று முதல் மூடல்.. போக்குவரத்து மாற்றம்.. மாற்று வழி என்ன..?

காவிரி பாலம்

காவிரி பாலம்

கடந்த மாதமே இந்த பாலத்தில் சீரமைப்பு பணிகளை தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால் காவிரியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் நீர் வரத்து அதிகரித்ததால் இந்த பணி ஒத்தி வைக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli | Tamil Nadu
    மக்களின் பிரதான சாலையாக அமைந்துள்ள காவிரி பாலம் இன்று அதிகாலை முதல் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டுள்ளது.

    திருச்சியில் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் காவிரிப் பாலம், கடந்த, 1976ம் ஆண்டு முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் பிரம்மானந்த ரெட்டி, தமிழக ஆளுநரின் ஆலோசகர் ஆர்.பி. சுப்பிரமணியன் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.

    சென்னை - திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையாக, ஒரு காலத்தில் முக்கிய போக்குவரத்து பாதையாக காவிரிப் பாலம் இருந்தது. தற்போது, ஸ்ரீரங்கம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையத்தை இணைக்கும் முக்கிய பாலமாக விளங்குகிறது. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் இந்த பாலத்தை கடந்து செல்கின்றன. தொடர்ந்து, 45 ஆண்டுகளாக போக்குவரத்திற்கு பயன்பட்டு வரும் காவிரிப் பாலத்தில், பல்வேறு இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது.



    மேலும், காவிரிப் பாலத்தின் தூண்களும் பலமிழந்தன.
    பாலத்தை சீரமைக்கும் பணிகள் அவ்வப்போது நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்நிலையில், மீண்டும் இப்பாலம் கடுமையாக சேதமடைந்தது. போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலைக்கு உள்ளானது. அதையடுத்து, நெடுஞ்சாலைத் துறையின் தொழில் நுட்பக்குழுவினர் பாலத்தை ஆய்வு செய்தனர்.

    ALSO READ | 90s கிட்ஸ்களின் ஃபேவரைட் குச்சி ஐஸ்களின் இன்றைய நிலை... விருதுநகரில் எங்கு கிடைக்கும்?

    பாலம் கட்டப்பட்டு, 45 ஆண்டுகள் ஆகிவிட்டதாலும், கனரக வாகனங்கள் செல்லும் போது ஏற்படும் அதிர்வுகள் காரணமாகவும் பாலத்தின் பேரிங்குகள் அனைத்தும் முழுமையாக சேதமடைந்துள்ளது தெரியவந்தது. அதையடுத்து, பாலத்தை உடனடியாக சீரமைக்க, ரூ.6.87 கோடியை முதல்வர் ஸ்டாலின் ஒதுக்கினார். இந்நிலையில், பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இன்று அதிகாலை முதல் காவிரிப் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. கனரக வாகனங்கள் மற்றும் பொது போக்குவரத்து வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.

    கடந்த மாதமே இந்த பாலத்தில் சீரமைப்பு பணிகளை தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால் காவிரியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் நீர் வரத்து அதிகரித்ததால் இந்த பணி ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது நீர்வரத்து குறைந்துள்ள நிலையில் பணிகள் துவங்கியுள்ளன.  சீரமைப்பு பணிகள், 5 மாதத்தில் முடிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    போக்குவரத்து மாற்றம்

    திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் முதல், அண்ணாசிலை வழியாக, ஸ்ரீரங்கம் செல்ல காவிரிப் பாலத்திற்கு முன்னதாக உள்ள ரயில்வே மேம்பாலத்திலிருந்து ஓயாமரி வழியாக (காவிரி தென் கரை சாலை) சென்று இடதுபுறம் திரும்பி, சென்னை பையாஸ் சாலை (சென்னை - திருச்சி - திண்டுக்கல் சாலை) பழையப் பாலத்தின் வழியாகச் சென்று இடதுபுறம் திரும்பி கும்பகோணத்தான் சாலை (காவிரி இடது கரை சாலை) வழியாக ரயில்வே மேம்பாலம் ஏறி திருவானைக்கோவில் அடைந்து ஸ்ரீரங்கம் செல்லாம்.

    ALSO READ | இப்படிக்கூட ஒரு ஓட்டல் இருக்கா..!! ஆச்சரியப்படுத்தும் தஞ்சை செல்லம்மாள் மண்பானை உணவகம்..!!

    ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்திலிருந்து இடதுபுறம் உள்ள திருவானைக்கோவில் செல்லும் சாலையில் ரயில்வே மேம்பாலத்தின் வழியாக திருவானைக்கோவில் வந்தடைந்து வலதுபுறம் திரும்பி ட்ரங் ரோடு வழியாக, ரயில்வே மேம்பாலம் ஏறி இடதுபுறம் திரும்பி கும்பகோணத்தான் சாலை வழியாக வந்து திரும்பி சென்னை பைபாஸ் சாலை (சென்னை -திருச்சி-திண்டுக்கல் சாலை) பழைய பாலத்தின் வழியாக வந்து ஓயாமரி வழியாக (காவிரி தென்கரை சாலை) அண்ணாசிலை வந்தடைந்து சத்திரம் பேருந்துநிலையம் செல்லலாம்.



    திருச்சியிலிருந்து சென்னை செல்லும் வாகனங்கள், நகரத்தின் வழியாக செல்லும் போக்குவரத்தைத் தவிர்த்து புறவழிச்சாலை வழியாக, சஞ்சீவி நகர் மார்க்கமாக காவிரி புதுப்பாலம் வழியாக நெ.1. டோல்கேட் அடைந்து சென்னை செல்லலாம்.

    அவ்வாறே, சென்னையிலிருந்து திருச்சி வரும் வாகனங்கள் நெ.1.டோல்கேட் அடைந்து புறவழிச்சாலை மார்க்கமாக திருச்சி அடையலாம்.

    காவிரி புதுப்பாலம் வழியாக வந்துசத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் புறநகர் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் அண்ணாசிலை வழியாக காவிரி பாலத்திற்கு முன்னதாக உள்ள ரயில்வே மேம்பாலத்திலிருந்து ஓயாமேரி வழியாக சென்று இடதுபுறம் திரும்பி சென்னை பைபாஸ் சாலை காவிரி பழைய பாலத்தில் சென்று நேராக நெ.1.டோல்கேட் சென்று செல்லலாம்' என்று மாவட்ட நிர்வாகம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Anupriyam K
    First published:

    Tags: Transport, Trichy

    அடுத்த செய்தி