ஹோம் /நியூஸ் /திருச்சி /

பள்ளி கழிவறையில் வீசப்பட்ட பச்சிளம் சிசு.. திருச்சியில் அதிர்ச்சி!

பள்ளி கழிவறையில் வீசப்பட்ட பச்சிளம் சிசு.. திருச்சியில் அதிர்ச்சி!

மாதிரி படம்

மாதிரி படம்

Trichy | பள்ளியின் சுற்றுவட்டார பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli | Tiruchirappalli

திருச்சியில் அரசு பெண்கள் பள்ளி அருகே கழிவறையில் கிடந்த ஆண் சிசுவை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில் ஆதித் திராவிடர் நலப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளியின் கழிவறை அருகே பிறந்து சில மணி நேரங்களே ஆன, ஆண் சிசு ஒன்று இறந்த நிலையில், கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்ற திருவெறும்பூர் போலீசார், இறந்து கிடந்த ஆண் சிசுவின் சடலத்தை மீட்டு, உடற்கூறாய்விற்காக, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து, பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறையில் குழந்தை பிறந்ததா? அல்லது, வெளியில் பிறந்த ஆண் சிசுவை யாராவது பள்ளி வளாகத்தில் வீசிச் சென்றனரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ALSO READ | திருச்சி மக்களே உஷார்.. இனி ரோட்டுலா போஸ்டர்ஸ் ஒட்டக்கூடாதாம்..!

இதற்கிடையே, ஆதித்திராவிடர் நலத்துறை தனி தாசில்தார் சந்திரதேவநாதன் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து, மாணவிகள் யாருக்காவது குழந்தை பிறந்ததா? என்று பள்ளியில் தீவிர விசாரணை நடத்தினர்.

இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் தடுக்க, பள்ளி வளாகத்தில் போதுமான பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும். மேலும், பள்ளியின் சுற்றுவட்டார பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர்: விஜயகோபால், திருச்சி.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Crime News, Dead body, Local News, Trichy