Home /News /trichy /

திருச்சியில் புத்தக திருவிழாவை தொடங்கி வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு!

திருச்சியில் புத்தக திருவிழாவை தொடங்கி வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு!

திருச்சி புத்தக திருவிழா

திருச்சி புத்தக திருவிழா

இந்த திருவிழாவில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் கோளரங்கம் மற்றும் வான் நோக்குதல் மாணவர்களுக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அரங்குகள் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India
    திருச்சியில் செப்டம்பர் 16 முதல் 25 ஆம் தேதி வரை நடைபெறும் புத்தக திருவிழாவை அமைச்சர்கள் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.

    திருச்சியில் புத்தக திருவிழா செப்டம்பர் 16 முதல் 25 ஆம் தேதி வரை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது.

    இதனை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் K.N. நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிறுபான்மை நலத்துறை மற்றும் வெளிநாடு வால் தமிழர்கள் நல துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.

    இந்த புத்தக திருவிழாவில் 5 ஏக்கர் பரப்பளவில் 160 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டு 150 க்கும் மேற்பட்ட பதிப்பாளர்களின் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த திருவிழாவில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் கோளரங்கம் மற்றும் வான் நோக்குதல் மாணவர்களுக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அரங்குகள் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும்.

    இதையும் வாசிக்க: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

    இதில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், சட்ட மன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், அப்துல் சமது ஆகியோர் கலந்து கொண்டனர்.
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: KN Nerhu, Minister Anbil Mahesh, Trichy

    அடுத்த செய்தி