Home /News /trichy /

இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக பேசியதாக ஜெகத் கஸ்பர் மீது பாஜக புகார் மனு!

இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக பேசியதாக ஜெகத் கஸ்பர் மீது பாஜக புகார் மனு!

இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக பேசியதா ஜெகத் கஸ்பர் மீது பாஜக புகார்

இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக பேசியதா ஜெகத் கஸ்பர் மீது பாஜக புகார்

சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த ஜெகத் கஸ்பருக்கு எதிராக பாஜக உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து எதிர்வினை ஆற்றி வருகின்றன.

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய பாதிரியார் ஜெகத் கஸ்பரை கைது செய்ய வலியுறுத்தி, பாஜகவினர் இன்று காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி மற்றும் சென்னையில் நடைபெற்ற 'வெறுப்பு பிரச்சாரத்தை வேரறுப்போம்' என்ற கூட்டங்களில், "இஸ்லாமியர்கள் மற்றும் ஆதிக்குடிகள் 40% இருக்கிறீர்கள். எனவே, 40% நிலத்தை கேட்டுப் பெறுங்கள்" என்று சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை ஜெகத் கஸ்பர் பேசியிருந்தார்.

இக்கருத்திற்கு, பாஜக உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து எதிர்வினை ஆற்றி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதன் ஒரு பகுதியாக, 'இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய ஜெகத் கஸ்பரை கைது செய்ய வேண்டும்' என்று வலியுறுத்தி, திருச்சி மாவட்ட பாஜக சிறுபான்மை பிரிவினர் சார்பில், மாநில துணைத் தலைவர் பாட்ஷா இன்று திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயனிடம் புகார் மனு அளித்தார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, "உடனடியாக பாதிரியார் ஜெகத் கஸ்பர் மீது காவல்துறை கைது செய்து நடவடிக்கை  எடுக்க வேண்டும். இல்லையென்றால் தமிழக அளவில் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும்" என்று தெரிவித்தார்.
Published by:Esakki Raja
First published:

Tags: BJP, Trichy

அடுத்த செய்தி