ஹோம் /நியூஸ் /திருச்சி /

திருச்சி மக்களே உஷார்.. இனி ரோட்டுலா போஸ்டர்ஸ் ஒட்டக்கூடாதாம்..!

திருச்சி மக்களே உஷார்.. இனி ரோட்டுலா போஸ்டர்ஸ் ஒட்டக்கூடாதாம்..!

மாதிரி படம்

மாதிரி படம்

முதல் கட்டமாக நீதிமன்ற வளாகம் அருகே 98 சதுர அடி பரப்பளவில் பொது சுவரொட்டி பலகை நிறுவப்பட்டுள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli | Tiruchirappalli

திருச்சி நகரில் ஆங்காங்கே ஒட்டப்படும் சுவரொட்டிகளால் மாநகரின் அழகு பாழாகிறது . இதை தடுப்பதற்கு திருச்சி மாநகராட்சி ”பொது சுவரொட்டி பலகை” என்ற  புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 

மாநிலத்தின் மையப்பகுதியாக விளங்கும் திருச்சி, 1994 ஆம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த மாநகராட்சியில் ஐந்து மண்டலங்களில்  65 வார்டுகள் உள்ளன. இதன் மொத்த பரப்பளவு 167.2,3 சதுர கிலோமீட்டர் ஆகும். 12 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இங்கு வசிக்கின்றனர்.

பொலிவுறு நகரத் திட்டத்தில் இணைந்துள்ள திருச்சி நகரின் அழகை பாழாக்குவதில் சுவரொட்டிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.  பாலங்கள், அரசு அலுவலகங்கள், சுவர்கள், கட்டிடங்கள், குப்பை தொட்டிகள், பேருந்து நிலையங்கள், சாலையின் தடுப்பு சுவர்கள்  என்று திரும்பிய திசை எல்லாம் சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன.

பல இடங்களில் முகம் சுழிக்கும் வகையிலான சுவரொட்டிகளும் இடம்பெறுகின்றன. இவற்றால் மாநகர அழகு பாழாகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் தமிழகத்திலேயே முதன் முறையாக திருச்சி மாநகராட்சி புதிய திட்டம்  ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. அது தான்   ”பொது சுவரொட்டிப் பலகை” என்ற புதிய திட்டம் ஆகும்.

அதன்படி மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும்  தலா 5  இடங்களை தேர்வு செய்து இந்த இடத்தில் பொது சுவரொட்டி பலகை வைக்கப்படுகிறது.

இந்தப் பலகையின் மட்டும் தான் சுவரொட்டிகளை ஒட்ட வேண்டும். வேறு இடங்களில் ஒட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரித்துள்ளது.  இந்தத் திட்டத்தின் முதல் கட்டமாக நீதிமன்ற வளாகம் அருகே 98 சதுர அடி பரப்பளவில் பொது சுவரொட்டி பலகை நிறுவப்பட்டுள்ளது.

தேவைப்பட்டால் 25 இடங்கள் என்ற எண்ணிக்கையையும் நாளடைவில் உயர்த்தப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். திருச்சி மாநகராட்சியின் இந்த அசத்தில் திட்டத்தை மற்ற மாநகராட்சியும் பின்பற்றலாமே.

First published:

Tags: Advertisement, Local News, Trichy