முகப்பு /செய்தி /திருச்சி / திருநங்கைகள் முன்னின்று நடத்திய அம்மன் திருவிழா; ஸ்ரீரங்கத்தில் கோலாகலம்

திருநங்கைகள் முன்னின்று நடத்திய அம்மன் திருவிழா; ஸ்ரீரங்கத்தில் கோலாகலம்

திருச்சி - திருநங்கைகள் முன்னின்று நடத்திய அம்மன் திருவிழா

திருச்சி - திருநங்கைகள் முன்னின்று நடத்திய அம்மன் திருவிழா

srirangam | திருச்சி ஸ்ரீரங்கத்தில் திருநங்கைகள் முன்னின்று நடத்திய அம்மன் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

திருச்சி ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் பரிவார தெய்வங்களுடன் அமைந்துள்ளது. இந்த கோயிலின் ஆடித்திருவிழா கடந்த, ஆடி 18ம் தேதி காப்புக் கட்டுதலுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான கரகப் புறப்பாடு நேற்றிரவு நடந்தது. முன்னதாக, ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் காவிரிப் படித்துறையில் ஒன்று திரண்ட திருநங்கைகள், காவிரியில் புனித நீராடினர். குடங்களில் புனித நீரை சேகரித்தனர்.

அங்கேயே சாமியாடி, பூவால் அலங்கரிக்கப்பட்ட கரகங்கள், அக்னி சட்டியை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக புறப்பட்டனர். கரக புறப்பாட்டின் போது, உடுக்கு, உருமி மேளம் முழங்க அவர்கள் சாமியாடியது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. மருளாளிகள் அரிவாளுடன், மற்றவர்கள் புனிதநீர் குடங்களுடன் ஊர்வலமாக கிளம்பினர். தாரை தப்பட்டை, உருமி மேள தாளங்கள் முழங்க, வாண வேடிக்கைகளுடன் ஊர்வலம் கோயிலை சென்றடைந்தது.

புனித நீரை கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. விழாவில் ஏராளமான திருநங்கைகள் பங்கேற்றனர். இந்த கோவிலை பொறுத்தவரை முழுக்க முழுக்க திருநங்கைகளே முன்னின்று இன்று திருவிழாவை நடத்துகின்றனர்.

திருவிழாவில் திருநங்கைகள்

Also see... மீண்டும் சேர்ந்து நடிக்கும் ஆல்யா - சஞ்சீவ் ஜோடி!

விழுப்புரம் மாவட்டம் கூவாகத்தில் மட்டுமே திருநங்கைகள் அதிகளவு ஒன்று கூடும் கோயில் திருவிழா நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Aadi, Amman Thayee, Trichy