ஹோம் /நியூஸ் /திருச்சி /

திருச்சியில் தடம் புரண்ட ரயில் பெட்டிகள்.. பாதியில் நிறுத்தப்பட்ட பயணிகள் ரயில்!

திருச்சியில் தடம் புரண்ட ரயில் பெட்டிகள்.. பாதியில் நிறுத்தப்பட்ட பயணிகள் ரயில்!

திருச்சியில் தடம் புரண்ட ரயில் பெட்டிகள்

திருச்சியில் தடம் புரண்ட ரயில் பெட்டிகள்

திருச்சியில் பராமரிப்பு பணி முடிந்து ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு வந்த ரயில்  பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tiruchirappalli, India

  திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே, லோகோ ஷெட்டில் பராமரிப்பு பணி முடிந்து ரயில் நிலையத்திற்கு வந்த ரயில் நேற்று  தடம் புரண்டது.

  திருச்சி பொன்மலை பணிமனையில் ரயில் எஞ்சின் மற்றும் பெட்டிகள் பழுது பார்க்கப்படும். இது தவிர ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே எடமலைப்பட்டி புதூர் பகுதியில் ரயில் பராமரிப்பு பணிக்கான லோகோ செட் உள்ளது.

  நேற்று மாலை 3 மணி அளவில் இந்த லோகோ செட்டில் இருந்து பராமரிப்பு பணி முடிந்து ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு 50 பெட்டிகள் கொண்ட ஒரு ரயில் புறப்பட்டது. ஆனால் ரயில் நிலையத்திற்கு வரும் முன்பாகவே இன்ஜினில் இருந்து 2 மற்றும் 5வது பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டன.

  Also see... சபரிமலை மண்டல பூஜை: புது ரூல்ஸ்.. பேருந்து சேவை.. ரூட் விவரம்..

  ரயில் தடம் புரண்ட தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு ரயில் மூலம் தடம் புரண்ட பெட்டிகளை சரி செய்தனர். பின்னர் பெட்டிகளை ரயில் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

  Also see... 55 கிமீ வேகத்தில் காற்று! புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! மழை

  இதனால் குருவாயூரிலிருந்து சென்னை செல்லும் ரயில் திருச்சி எடமலைப்பட்டிப்புதூர் பகுதியில் வழியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. ரயில் பெட்டிகள் தடம் புரண்டதால் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. பயணிகள் ரயிலாக இருந்தாலும், பராமரிப்பு பணி முடிந்து வெறும் பெட்டிகளாக இருந்ததால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்பது குறிபிடத்தக்கது.

  செய்தியாளர்: சே.கோவிந்தராஜ், திருச்சி

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Railway, Trichy