Home /News /trichy /

சுங்க கட்டண உயர்வு... திருச்சியில் வாகன உரிமையாளர்கள் அதிருப்தி...

சுங்க கட்டண உயர்வு... திருச்சியில் வாகன உரிமையாளர்கள் அதிருப்தி...

Tiruchirappalli | தமிழகத்தில் நேற்று நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வாகன உரிமையாளர்களை அதிருப்தியடைய செய்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India
திருச்சி மாவட்டம் தொழில் நகரமாகவும், விவசாயம் சார்ந்த மாவட்டமாகவும் உள்ளது. தமிழகத்தில் மையப்பகுதியில் அமைந்துள்ள திருச்சி, தென் மாவட்டங்களின் நுழைவுவாயிலாக உள்ளது. இதனால், திருச்சி மட்டுமல்லாது, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு தொழில் சார்ந்த உதிரி பாகங்கள், விவசாய பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள, 48 சுங்கச் சாவடிகளில், 28 சுங்கச்சாவடிகளில் நேற்று நள்ளிரவு முதல் கட்டணங்கள்  உயர்த்தப்பட்டுள்ளன.

திருச்சி மாவட்டத்தில், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரத்தில் ஒரு சுங்கச்சாவடியும், திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பராய்த்துறை மற்றும் மணவாசியில் இரண்டு சுங்கச்சாவடிகளும், திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பொன்னம்பலபட்டியில் ஒரு சுங்கச்சாவடியும், திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடி அருகே ஒரு சுங்கச்சாவடியும் செயல்படுகின்றன.

திருச்சி சமயபுரம் சுங்கச் சாவடியில் காருக்கு சுங்க கட்டணம், ரூ.45ல் இருந்து, ரூ.55 ஆக உயர்த்தப் பட்டுள்ளது. பேருந்துக்கு, ரூ.165ல் இருந்து, ரூ.185 ஆகவும், லாரிக்கு, ரூ.265ல் இருந்து ரூ.300 ஆகவும்  கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Price hike, Toll Plaza, Trichy

அடுத்த செய்தி