திட்டமிட்டபடி ஜூன் 13-ல் பள்ளிகள் திறக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்
திட்டமிட்டபடி ஜூன் 13-ல் பள்ளிகள் திறக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ்
10 மற்றும் 12-,ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதாத மாணவர்களை அழைத்து அடுத்து நடைபெறும் உடனடி தேர்வை எழுத வைக்க அனைத்து முயற்சிகள் மேற்கொள்வோம். - அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி
திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி மற்றும் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா காட்டூர் பகுதியில் நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பட்டாக்களை வழங்கினார். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “ இந்த நிகழ்ச்சியில் 167 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. அது தவிர 40 மாற்றுதிறனாளிகளுக்கு அவர்கள் பயன்படுத்தும் உபகரணங்கள் மற்றும் நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மக்கள் அளிக்கும் மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார் அதன்படி செயல்பட்டு வருகிறோம். கல்வி துறை தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு ஒன்றிய அரசு எப்பொழுதும் கடைசி நேரத்தில் தான் நம்மை அழைக்கின்றனர். குஜராத்தில் நடந்த கல்வி மாநாட்டிற்கும் அவ்வாறே அழைத்தனர். தமிழ்நாட்டில் கல்வி துறை தொடர்பான பல்வேறு நிகழ்சிகளை முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் நடத்தி வருகிறோம்.
மாநில கல்வி கொள்கையை உருவாக்க குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. நம் மாநிலத்திற்கு என்ன தேவை என்பதை நாமே முடிவு செய்யும் கூட்டத்திற்கு தான் முக்கியத்துவம் தருவோம் அது தான் நம் மாநிலத்திற்கும் நல்லது. பள்ளி திறப்பில் எந்த மாற்றமும் இல்லை. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதில் ஏதும் மாற்றங்கள் செய்ய வேண்டுமா அல்லது விதிமுறைகள் பின்பற்ற வேண்டுமா என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆலோசனையின் அடிப்படையில் அரசு முடிவெடுக்கும்.
Follow @ Google News:கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதுகுறித்து முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டால் அதை பின்பற்றுவோம். பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதாத மாணவர்களை அழைத்து அடுத்து நடைபெறும் உடனடி தேர்வை எழுத வைக்க அனைத்து முயற்சிகள் மேற்கொள்வோம். நீட் தேர்வை நடத்துவதே பா.ஜ.க அரசு தான். ஆனால் அண்ணாமலை அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாமே என நம்மிடம் கூறுகிறார் என்றார். இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாநகராட்சி துணை மேயர் திவ்யா, மாவட்ட ஆட்சியர் சிவராசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.