முகப்பு /செய்தி /திருச்சி / தீபாவளியை முன்னிட்டு மணப்பாறையில் களைகட்டிய ஆட்டு சந்தை.. ரூ.80 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை

தீபாவளியை முன்னிட்டு மணப்பாறையில் களைகட்டிய ஆட்டு சந்தை.. ரூ.80 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை

ஆடுகள் விற்பனை

ஆடுகள் விற்பனை

Tiruchirappalli | மணப்பாறை சந்தையில் விறுவிறுப்பாக நடைபெற்ற ஆடு விற்பணை.தீபாவளி நெருங்குவதால் ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பணையாகின.

  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள மாட்டுச்சந்தை பிரசித்தி பெற்றதாகும். வாரம் தோறும் செவ்வாய்கிழமை மாலை துவங்கி புதன்கிழமை மதியம் வரை மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். அதேபோல் புதன்கிழமை காலை ஆட்டு சந்தை நடைபெறும். காலை 6 மணிக்கு துவங்கி நடைபெறும் ஆடுகளின் விற்பனையை பொறுத்து 9 மணியிருந்து 10 மணிக்கு முடிவடையும்.

இந்த ஆட்டு சந்தையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் ஆடுகளை விற்பனைக்கு அழைத்து வருவது வழக்கம். தீபாவளியை முன்னிட்டு இன்று நடைபெற்ற ஆட்டு சந்தையில் ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. கடந்த வாரத்தை விட தற்போது ஒரு ஆட்டின் விலை ரூ.500 முதல் 1000 வரை விலை குறையாக விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Also see...ஆசைவார்த்தை கூறி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - இளைஞர் போக்சோவில் கைது

திருச்சி புதுக்கோட்டை, திண்டுக்கல், கரூர், அரியலூர், மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் சந்தையில் ஆடுகளை வாங்கிச் சென்றனர். இன்று நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் ஆடுகள் 70 முதல் 80 லட்சம் வரை விற்பனையாகி உள்ளதாக கூறப்படுகிறது. ஆடுகளில் விலை கணிசமாக குறைந்து விட்டதால்   ஆடு வளர்க்கும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர்: ராமன், மணப்பாறை

top videos
    First published:

    Tags: Deepavali, Diwali, Manaparai