"பெரியார் பல்கலைக்கழகத்தில் ஜாதி குறித்து கேள்வி கேட்டவரை எவ்வளவு மோசமான வார்த்தைகளில் திட்ட முடியுமோ.. அந்த வார்த்தைகளில் திட்ட தோன்றுகிறது" என்று திருச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.
பெருந்தலைவர் காமராஜரின், 120வது பிறந்த நாளையொட்டி, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜர் திருவுருவச் சிலைக்கு, காங்கிரஸ் கட்சி சார்பில், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமையில், அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதன் பின்னர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறியபோது, "தமிழ்நாட்டில் மீண்டும் காமராஜர் ஆட்சி எப்பொழுது அமையும் என ஜோசியம் கூற முடியாது.
அவர் ஆட்சி போல் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும் என்பது தான் ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டர்களின் கனவு. அதை நோக்கி தான் பயணம் செய்கிறோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பாராளுமன்றத்தை ஜனநாயகத்தின் தொட்டில் என்றே கூறலாம். அது ஆளுங்கட்சியை பாராட்டும் இடமல்ல. மக்களின் பிரச்சனைகளை, கோரிக்கைகளை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேசுவார்கள்.
அப்படி பேசும் போது ஆளுங்கட்சியை விமர்சிக்கக் கூடாது என்பதற்காக சில வார்த்தைகளை பயன்படுத்த கூடாது என அறிவித்துள்ளார்கள். அதே போல பாராளுமன்ற வளாகத்தில் போராட்டம் செய்ய கூடாது என்கிறார்கள்.
இது ஜனநாயகத்தை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கை. மத்திய அரசின் சர்வாதிகார போக்கிற்கு இது எடுத்துக்காட்டு. இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் பாராளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
மோசமான வார்த்தை
பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியில், 'எது தாழ்ந்த ஜாதி?' என கேள்வி கேட்கப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
தன் வாழ்நாள் முழுவதும் ஜாதி ஒழிப்பிற்காக போராடிய தந்தை பெரியார் பெயரில் இயங்கும் பல்கலைக்கழகத்தில் இது போன்ற கேள்விகளை கேட்டவரை, எவ்வளவு மோசமான வார்த்தையில் திட்ட வேண்டுமோ அவ்வளவு மோசமான வார்த்தையில் திட்ட தோன்றுகிறது.
அந்த கேள்வியை கேட்டது யார்? அதற்கு பொறுப்பாளர் யாரோ, அவர்களை பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கி, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Thirunavukkarasar