ஹோம் /நியூஸ் /திருச்சி /

திருச்சியில் திருடன் என நினைத்து இளைஞரை வடமாநில தொழிலாளர்கள் அடித்து கொன்ற வழக்கில் திடீர் திருப்பம்

திருச்சியில் திருடன் என நினைத்து இளைஞரை வடமாநில தொழிலாளர்கள் அடித்து கொன்ற வழக்கில் திடீர் திருப்பம்

கொலையான சக்கரவர்த்தி

கொலையான சக்கரவர்த்தி

Trichy District News : திருச்சியில் மர அறுவை மில்லில் திருட வந்த நபரை கட்டி வைத்து அடித்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக, கொலை செய்து விட்டு நாடகமாடிய மில்லின் உரிமையாளர் சிக்கியுள்ளார்.

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மணிகண்டம் அம்பேத்கர் நகர் பகுதியில் ஆஷா புரா மர அறுவை ஆலை மற்றும் விற்பனை கடை இயங்கி வருகிறது. இந்த கடைக்கு வெள்ளிக்கிழமை மாலை வந்த மர்மநபர் ஒருவர் கடையின் மேலாளர் திரேந்தரின் கைபேசியை பறிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவர் சத்தமிடவே மர்ம நபர் தப்பித்து சென்றுவிட்டார் எனக் கூறப்படுகிறது. மீண்டும் இரவு நேரத்தில் வந்த அதே நபர் சுவர் ஏறிக் குதித்து அறுவை மில்லுக்குள் நுழைந்துள்ளார்.

அப்போது பணியில் இருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பணியாளர்களிடம் பணத்தை பறித்ததாக கூறப்படுகிறது. சுதாரித்துக் கொண்ட பணியாளர்கள் அவரைப் பிடித்து கடுமையாகத் தாக்கி கட்டி வைத்துள்ளனர். இதில் திருட வந்த மர்ம நபருக்கு பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் சனிக்கிழமை அதிகாலை இறந்துள்ளார். அதிகாலை அறுவை மில்லுக்கு வந்த மேலாளர் நரேந்தர் மணிகண்டம் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மர்ம நபர் உயிரிழந்த இடத்தை பார்வையிட்டு, உடலை உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சம்பவத்தின் போது பணியிலிருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சோகிது சேக், பைசல் ஷாக், மப்ஜில் ஹூக், ரசீதுல் ரஹ்மான் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் உயிரிழந்த நபர் திருச்சி துவாக்குடி பகுதியைச் 33 வயதான சக்கரவர்த்தி என்பது தெரியவந்தது. இவருக்கு திருமணம் ஆகி மனைவி உள்ளார் என்பதும் தெரியவந்தது.

இதையும் படிங்க : ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது சாபக்கேடு - துரை வைகோ காட்டம்

இந்த சம்பவம் குறித்து தகவல் கொடுத்த மேலாளர் திரேந்திரனிடம் விசாரித்த போது தான் வெளியூர் சென்று இரவுதான் வந்தேன் எனவும், 4 ஊழியர்கள் மட்டுமே பணியில் இருந்ததாகவும், காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், வழக்கில திடீர் திருப்பமாக மேலாளர் திரேந்திரன் தான், திருட வந்த இளைஞரை கட்டிவைத்து அடிக்க கூறியதாக பணியாளர்கள் விசாரணையின் போது தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது

மரக்கடையில் பணியில் இருந்த பைசல் ஷாக் மற்றும் மப்ஜில் ஹூக் ஆகியோர் சக்கரவர்த்தியை அடித்து துன்புறுத்தி கொலை செய்திருப்பது விசாரணையில் அம்பலமானது. கொலை செய்துவிட்டு நாடகமாடிய மரக்கடை மேலாளர் திரேந்திரன் மற்றும் ஊழியர்கள் பைசல் ஷாக், மஜ்ஜில் ஹூக் ஆகியோரை மணிகண்டம் போலீசார் கைது செய்தனர்.

First published:

Tags: Crime News, Local News, Trichy