திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் சமயபுரத்தில் அமைந்துள்ளது மாரியம்மன் திருக்கோயில். இந்த கோயில் சக்தி ஸ்தலங்களில் முதன்மையாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் தைப்பூச திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டு தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் இன்று காலை கோலாகலமாக தொடங்கியது. அதன்படி உற்சவ அம்பாள் கேடயத்தில் புறப்பாடாகி கொடிமரத்திற்கு முன்பு எழுந்தருளினார்.
இதனைத்தொடர்ந்து கொடிமரத்திற்கு பால், சந்தனம் உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கொடிமரத்தில் பக்தி பரவசத்துடன் கொடியேற்றப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றது. இதையடுத்து ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெறும்.
மேலும் பிப்.3ம் தேதி தெப்ப திருவிழாவும், பிப். 4ம் தேதி திருக்கோயிலிலிருந்து அம்மன் கண்ணாடி பல்லக்கில் புறப்பாடும், தொடர்ந்து இரவு வடதிருக்காவேரி கரையில் அரங்கநாதரிடமிருந்து சீர்பெறும் நிகழ்வும், பிப்.5 ம் தேதி மஹா அபிஷேகத்துடன் வழி நடை உபயங்களை கண்டருளிகிறார். இந்நிகழ்வில் திருக்கோயில் இணை ஆணையர் கல்யாணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் : கோவிந்தராஜ் - திருச்சி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Local News, Trichy