ஹோம் /நியூஸ் /திருச்சி /

''சுதந்திர போராட்ட வரலாற்றை திருத்தி எழுதணும்'' - காங்கிரஸை சாடிய ஆளுநர் ஆர்.என்.ரவி!

''சுதந்திர போராட்ட வரலாற்றை திருத்தி எழுதணும்'' - காங்கிரஸை சாடிய ஆளுநர் ஆர்.என்.ரவி!

கவர்னர் ரவி

கவர்னர் ரவி

சுதந்திர போராட்டத்தை மக்களை மையப்படுத்தி ஆவணப்படுத்தும் நோக்கில் திருத்தி எழுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

காங்கிரஸ் மட்டும் சுதந்திரத்திற்காக போராடவில்லை எனவும் இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றை திருத்தி எழுத வேண்டும் என்றும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தியுள்ளார்.

திருச்சி நேஷனல் கல்லூரி, தேசிய சிந்தனை கழகம் ஆகியவை இணைந்து, சுதந்திர அமுதப் பெருவிழா, பாரதியார் பிறந்த நாள் மற்றும் ராமலிங்க வள்ளலாரின் 200 வது பிறந்த தினம் என "முப்பெரும் விழாவை" நடத்தின.

திருச்சி கருமண்டபம் அருகே உள்ள நேஷனல் கல்லூரியில் நடைபெற்ற இந்த விழாவில், இந்திய விடுதலைப் போரில் தென்னிந்திய மொழிகளின் பங்களிப்பு என்ற தலைப்பில் பலரும் பேசினர். இதில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், சுதந்திர போராட்டத்தில் இந்திய தேசிய காங்கிரசை சேர்ந்தவர்கள் மட்டும் இன்றி, ஏராளமானோர் கலந்து கொண்டதாக கூறினார். ஆனால், சுதந்திர போராட்ட வரலாறு இந்திய தேசிய காங்கிரஸை மட்டும் மையப்படுத்தப்படுத்தி ஆவணப்படுத்தப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டார். எனவே, சுதந்திர போராட்டத்தை மக்களை மையப்படுத்தி ஆவணப்படுத்தும் நோக்கில் திருத்தி எழுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்நிலையில், நேஷனல் கல்லூரியில் வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் ஆளுநரை சந்திக்க ஆர்வத்துடன் வந்தனர். அப்போது, அவர்களுடன் கலந்துரையாடிய ஆளுநர், நீங்கள் விளையாட்டில் கவனம் செலுத்துவதுபோல் படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். அத்துடன், வாழ்க்கையில் தோல்விகளை கண்டு துவண்டுவிடக்கூடாது எனவும், தொடர்ந்து போராட வேண்டும் எனவும் கூறினார்.

First published:

Tags: Congress, RN Ravi, Tamil Nadu Governor