Home /News /trichy /

சிவலிங்கத்தை வழிபட்ட சூரியக் கதிர்கள்! திருச்சியில் நடந்த 'அதிசய' நிகழ்வு

சிவலிங்கத்தை வழிபட்ட சூரியக் கதிர்கள்! திருச்சியில் நடந்த 'அதிசய' நிகழ்வு

சிவன் கோவில் - காசி விஸ்வநாதர் ஆலயம் திருச்சி

சிவன் கோவில் - காசி விஸ்வநாதர் ஆலயம் திருச்சி

Tiruchirappalli | திருச்சி சர்க்கார் பாளையத்தில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் கருவறையில் உள்ள சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India
திருச்சி கல்லணை சாலை காவிரிக் கரையோரம் சர்க்கார் பாளையத்தில் காசி விஸ்வநாதர் ஆலயம் அமைந்துள்ளது. முற்கால சோழரான கரிகாலச் சோழனால் கட்டப்பட்ட சிறப்புக்குரியது இத்திருத்தலம். இங்கு ஆண்டுதோறும் ஆவணி மாதம், 7,8,9 ஆகிய தேதிகளில் தொடர்ந்து மூன்று நாட்கள் சூரியக் கதிர்கள் சிவனை வழிபடும் அரிய நிகழ்வு நிகழ்கிறது. 

இவ்வாண்டு இதே போல, காலை சூரிய உதயம் துவங்கி, முன் மண்டபம் வழியாக கருவறைக்குள் நுழைந்த சூரியக் கதிர்கள், சிவலிங்கத்தின் நெற்றியில் பட்டு பொட்டாக ஜொலித்த காட்சி பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

இதுபோன்ற சூரியக் கதிர்கள் வழிபடும் நேரத்தில் பக்தர்களுடைய அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அதனால், நூற்றுக்கணக்கான பக்தர்கள் அதிகாலையிலிருந்து காத்திருந்து சூரியக் கதிர்கள் சிவனை வழிபட்ட நிகழ்வை கண்டு மெய்சிலிர்த்தனர்.

சூரியக் கதிர்கள் வழிபடும் நிகழ்வையொட்டி, ஸ்வாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபராதனைகள் நடைபெற்றன.

அரிய நிகழ்வு


 

Also see... சிவனை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா?

விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் நித்தியா, பரம்பரை அறங்காவலர்கள் சுந்தர மீனாட்சி, ராஜாராம், கோயில் சுவாமிநாத சிவம் ஆகியோர் செய்திருந்தனர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Sivan, Trichy

அடுத்த செய்தி