Home /News /trichy /

சீமான், மணியரசன் போன்றோர் பாஜகவின் கைக்கூலிகள்... பேராசிரியர் சுப.வீரபாண்டியன் குற்றச்சாட்டு...

சீமான், மணியரசன் போன்றோர் பாஜகவின் கைக்கூலிகள்... பேராசிரியர் சுப.வீரபாண்டியன் குற்றச்சாட்டு...

பேராசிரியர் சுப.வீரபாண்டியன்

பேராசிரியர் சுப.வீரபாண்டியன்

Tiruchirappalli | பாஜகவினர் தமிழகத்தில் வன்முறை கட்டவிழ்த்து விடுவார்கள். மணியரசன், சீமான் போன்றோர் பாஜகவின் கைக்கூலிகள். திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் குற்றச்சாட்டியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India
    திருச்சி மாவட்டம், மணப்பாறையில் திராவிட நட்புக் கழகத்தின் அறிமுகக்கூட்டம் சேதுரெத்தினபுரத்தில் உள்ள தனியார் திருமண மஹாலில் நடைபெற்றது. இதில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் கலந்து கொண்டு பேசினார். 

    அப்போது,” தமிழக நிதியமைச்சர் கார் மீது செருப்பு வீசினார்கள். என்ன செய்வது கருத்தோடு இருப்பவர்கள் கருத்தாக இருப்பார்கள் வெறும் செருப்போடு இருப்பவர்கள் செருப்பாகத்தான் இருப்பார்கள். தமிழ்நாட்டை மட்டுமல்ல திமுகதான் இனி அதிமுகவையும் காப்பாற்ற வேண்டும்.

    பாஜகவினர் சூத்திரம் வைத்துள்ளார்கள். இரண்டு கட்சிகள் மாநிலத்தில் வலிமையாக இருந்தால் இரண்டாவதாக இருக்கும் கட்சியை அழி. இரண்டாம் இடத்தை பிடி என்பதுதான் அந்த சூத்திரம். அதுதான் அவர்களின் நோக்கம். அவர்கள் தற்போது அதிமுகவை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். அது எல்லோருக்கும் தெரியும்.

    இபிஎஸ்சும் ஓபிஎஸ்சும் அவர்களாக சண்டைபோட்டுக் கொள்ளவில்லை. சண்டை போட்டுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிமுகவை அழித்து விட்டு தாங்கள் வந்து விடலாம் என்று நினைக்கிறார்கள். அவர்களுக்குத் தெரியும் திமுகவின் மீது கைவைக்க முடியாது என்று. அவர்கள் தமிழகத்தில் இரண்டாவது இடத்தை மட்டுமல்ல ஏழாவது இடத்தைக்கூட பிடிக்க முடியாது.

    தாமரைக்கும் தமிழ்நாட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் அவர்கள் வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவார்கள். அதற்கு துணையாக சில மோசமான அமைப்புகளை அவர்கள் உருவாக்கி கொண்டிருக்கிறார்கள். மணியரசன், சீமான் பாஜகவின் கைக்கூலிகள். அவர்கள் முழுக்க முழுக்க திராவிடத்தை எதிர்க்கும் நோக்கத்திற்காக மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளனர். பாஜகவோடு இருந்தவன் யாரும் வாழ்ந்ததில்லை”  இவ்வாறு அவர் பேசினார்.

    Also see... சமூக நீதிக்கு பாடுபட்டவர்களுக்கு பெரியார் விருது

    கூட்டத்தில் மனித நேயக்கட்சியின் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமது, திராவிட இயக்க தமிழர் பேரவை, திராவிட நட்புக்கழகத்தினர், மற்றும் திராவிடர் கழகத்தினர், திமுகவினர் கலந்து கொண்டனர்.

    செய்தியாளர்: ராமன், மணப்பாறை
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: BJP, Manaparai, Seeman

    அடுத்த செய்தி