ஹோம் /நியூஸ் /திருச்சி /

புரட்டாசி முதல் சனிக்கிழமை  ஸ்ரீரங்கம் கோவிலில் அலைமோதிய பக்கதர்கள் கூட்டம்

புரட்டாசி முதல் சனிக்கிழமை  ஸ்ரீரங்கம் கோவிலில் அலைமோதிய பக்கதர்கள் கூட்டம்

ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்கள் வெள்ளம்

ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்கள் வெள்ளம்

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான இன்று, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி, திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஆண்டு தோறும் வரும் புரட்டாசி மாதம் வைணவர்கள் போற்றக்கூடிய மாதமாக விளங்குகிறது. இம்மாதத்தில் அசைவ உணவுகளை தவிர்க்கும் பெரும்பாலான மக்கள், சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து கோயில்களுக்கு சென்று பெருமாளை வழிபடுவது வழக்கம்.

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான இன்று, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான வசதிகளை, கோயில் நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் தலைமையிலான போலீசார் செய்திருந்தனர்.

Also Read : நாட்டின் கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்தை வலுப்படுத்த வேண்டும் : ஆளுநர் ஆர்.என்.ரவி

புரட்டாசி மாதத்தையொட்டி, பக்தர்களின் வசதிக்காக, மூலவர் தரிசன நேரம் அதிகரிப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல, உறையூர் நாச்சியார் கோயில், அன்பில் சுந்தர பெருமாள் கோயில், குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயில், துறையூர் பெருமாள் மலை உள்ளிட்ட கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

Published by:Sankaravadivoo G
First published:

Tags: Srirangam