ஹோம் /நியூஸ் /திருச்சி /

தண்ணீருக்கு தவிக்கும் இலங்கை தமிழர்கள்... காலிக் குடங்களுடன் பெண்கள் திடீர் மறியல்

தண்ணீருக்கு தவிக்கும் இலங்கை தமிழர்கள்... காலிக் குடங்களுடன் பெண்கள் திடீர் மறியல்

குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்

குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்

Tiruchirappalli | கடந்த, 3 மாதங்களாக குடிநீர் வராததை கண்டித்து, திருச்சி கொட்டப்பட்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக் குடங்களுடன் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாநகரம் கொட்டப்பட்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில், 450க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள மக்களுக்கு, நான்கு பொதுக் குழாய்கள் மூலம் காவிரி குடிநீர் தினமும், 2 மணி நேரம் வழங்கப்பட்டு வந்தது.

மேலும், குளிப்பதற்கு, துவைப்பதற்கு என்று தனியாக, பிறாயடி கருப்பு கோவில் பகுதியில் இருந்து தினமும் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில், கொட்டப்பட்டு குளம் அருகே நெடுஞ்சாலைத்துறை சாலை அமைத்தபோது, அந்த குழாய் உடைந்து விட்டது. கடந்த, 3 மாதங்களாக குடிப்பது தவிர்த்த மற்ற பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் வரத்து முழுமையாக நின்றுவிட்டது. குடிப்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் காவிரி நீர், தற்போது தினமும் இரண்டு மணி நேரம் மட்டுமே வருகிறது.

Also see... கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் சப்-கலெக்டர் ஆனேன் - நடிகர் சின்னி ஜெயந்த் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன்

சொட்டு, சொட்டாக, குறைவான அளவிலும், கலங்கலாகவும் தண்ணீர் வருகிறது. இதனால் ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் கூட கிடைப்பதில்லை. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மக்கள், பல்வேறு முறை மாநகராட்சி அதிகாரியை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் எவ்வித நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள், காலிக் குடங்களுடன் திருச்சி- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த, கே.கே. நகர் காவல் உதவி ஆணையர் சதீஷ்குமார் தலைமையிலான போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் அப்பகுதி பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தேவையான அளவு குடிநீர் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் உடனடியாக செய்துத் தரப்படும் என்று அவர்கள் வாக்குறுதி அளித்ததன் பேரில், அப்பெண்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Drinking water, Protest, Sri Lanka, Trichy