ஹோம் /நியூஸ் /திருச்சி /

கண்ணாமூச்சி விளையாடிய நல்லபாம்பு..பீரோவின் பின் படமெடுத்தபோது பொசுக்கென்று பிடித்த தீயணைப்பு துறையினர்..

கண்ணாமூச்சி விளையாடிய நல்லபாம்பு..பீரோவின் பின் படமெடுத்தபோது பொசுக்கென்று பிடித்த தீயணைப்பு துறையினர்..

கண்ணாமூச்சி விளையாடிய நல்லபாம்பு

கண்ணாமூச்சி விளையாடிய நல்லபாம்பு

Snake Inside the House | அதிகாலையில் தனித்திருக்கும் மூதாட்டி வீட்டில் நல்ல பாம்பு இருப்பதை பார்த்த பொதுமக்கள் பாம்பின் பயத்தில் இருந்தனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மூதாட்டி வீட்டினுள்ளே நுழைந்த நல்ல பாம்பு ஒன்று சிக்காமல் சுத்திக்கொண்டிருந்துள்ளது. பின்னர் தீயணைப்புத் துறையினர் போராடி பத்திரமாக பிடித்து சென்றனர்.

  திருச்சி மாவட்டம் மணப்பாறை  காந்தி நகரை சேர்ந்தவர் ராஜலட்சுமி வயது 70.இவரது கணவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் மரணம் அடைந்த நிலையில் தனியாக வசித்து வருகிறார்.  இந்நிலையில் இன்று அதிகாலை வீட்டில் கட்டிலில் தூங்கி கொண்டிருந்த மூதாட்டி எப்போதும் போல எழுந்து வீட்டின் வெளியே சாதாரணமாக சென்றிருக்கிறார். பின்னர் வீட்டின் உள்ளே செல்வதற்காக கதவைத் திறந்த போது  பெரிய பாம்பு ஒன்று கட்டில் அடியில் செல்வதை  பார்த்து உள்ளார்.

  பாம்பை பார்த்த அதிர்ச்சியில் என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டில் வெளியே வந்து அக்கம்பக்கத்தினர் அழைத்து கூறியுள்ளார். அவர்களும் வந்து சிறிது நேரம் நோட்டமிட்டுவிட்டு பாம்பை காண இயலாத காரணத்தினால் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்ததனர்.

  Read More : இருசக்கர வாகனத்துக்குள் சீறிய சாரைப் பாம்பு! லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்ட இளைஞர்!

  செய்தியறிந்த மணப்பாறை தீயணைப்புத் துறையினர் உடனடியாக வந்து வீட்டில் உள்ளே சென்று அந்தப் பாம்பை  தேடும் பணியில் ஈடுபட்டனர். வீடு முழுவதும் தேடியும் பாம்பை காணவில்லை. பின்னர் அங்கிருந்த பீரோவை நகற்றும்போது  படம் எடுத்தவாறு நல்ல பாம்பு ஒன்று இருந்திருக்கிறது. அவர்கள் வைத்திருக்கும் பாம்பு பிடிக்க உதவும் கருவி மூலம் பத்திரமாக பிடித்து வீட்டின் வெளியே எடுத்து வந்தனர். பிடித்து வந்த நல்ல பாம்பை ஒரு பையில் போட்டு கட்டி எடுத்துச் சென்றனர்.

  செய்தியாளர் - ராமன் ( மணப்பாறை)

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Snake, Trichy