'அக்னிபத்' திட்டத்தை எதிர்த்து, திருச்சி மாவட்ட காங்கிரஸ் தலைமையகமான அருணாச்சலம் மன்றம் முன்பு, காங்கிரஸ் மூத்த தலைவரும், திருச்சி எம்பியுமான திருநாவுக்கரசர் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநகர் மாவட்டத் தலைவர் ஜவஹர், மாநிலச் செயலாளர் வக்கீல் சரவணன், பொருளாளர் ராஜா நசீர், முன்னாள் மேயர் சுஜாதா உட்பட, 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். அதைத்தொடர்ந்து, எம்.பி. திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறியபோது, "'அக்னிபத்' திட்டத்தின் கீழ், வேலையில்லா இளைஞர்களுக்கு குறைந்த சம்பளம்; குறைந்த பயிற்சி என்று வழங்கி, இந்திய ராணுவத்தை பலம் இழக்க செய்ய பார்க்கின்றனர்.
இது அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனாவுக்கு சாதகமாக போய்விடும். வறுமை மற்றும் வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தினால், தமிழகத்தில் இருந்து, 4,000 இளைஞர்கள் அக்னிபத் திட்டத்தில் இணைந்துள்ளனர். எதிர்காலத்தில் இத்திட்டம் குறித்து முழுமையாக தெரிந்த பின் அவர்களும் வருத்தப்படுவர்.
இரட்டைத் தலைமை என்பது, மாநிலக் கட்சிகளிலோ, தேசியக் கட்சிகளிலோ சரி வராது. அதிமுகவிலும் கட்சியை வலிமையாக வழிநடத்த ஒற்றைத் தலைமை வேண்டும். அது, ஓபிஎஸ்சோ- ஈபிஎஸ்சோ.. யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.
Also Read: ஓ.பன்னீர் செல்வம் துரோகத்தின் அடையாளம் - ஜெயக்குமார் காட்டம்
பொதுக்குழுவில் என்ன வேண்டுமானாலும் விவாதிக்கலாம். அதை நிறைவேற்றலாம். ஆனால் ஜனநாயக மாண்புகள் காக்கப்பட வேண்டும் என்பதே எனது இலவச ஆலோசனை. அதிமுகவில் நடக்கும் உட்கட்சி பூசலுக்கு காங்கிரஸ் ஒருபோதும் காரணமில்லை. அவர்கள் பாஜகவின் கைப்பாவையாக இருக்கின்றனர்" என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, Agnipath, BJP, Congress, Congress thirunavukarasar, Edappadi palanisamy, O Panneerselvam