ஹோம் /நியூஸ் /திருச்சி /

மது கொடுத்து 16வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. வெளியான அதிர்ச்சி வீடியோ.. திருச்சியில் பயங்கரம்

மது கொடுத்து 16வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. வெளியான அதிர்ச்சி வீடியோ.. திருச்சியில் பயங்கரம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Trichy News : திருச்சியில் 16 வயது சிறுமியை ஒரு வருடத்துக்கு முன்னர் 5 இளைஞர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சியில்  16 வயது சிறுமிக்கு பீர் வாங்கிக் கொடுத்து ஐந்து இளைஞர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளார். அந்த சிறுமி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருப்பார் எனக் கூறப்படுகிறது.  கொள்ளிடம் ஆற்றங்கரைக்கு அழைத்து சென்ற 5 இளைஞர்கள் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி மதுபான வகையான பீர் வாங்கிக்கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் இந்த கொடூரத்தை வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தை வெளியில் சொன்னால் இதனை இண்டர்நெட்டில் அனுப்பிவிடுவோம் என்று கூறி மிரட்டியுள்ளனர். சிறுமிக்கு பெற்றோர் யாரும் இல்லை. வாலிபர்களுடன் சிறுமி பேசிக்கொண்டு சுற்றுவதை கவனித்த உறவினர்கள் 16 வயதிலே திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.  16 வயதில் சிறுமிக்கு திருமணம் நடைபெற்ற தகவலின் அடிப்படையில், சிறுமியை மீட்ட மாவட்ட சமூக நல அலுவலகம் மற்றும் முசிறி காவல் நிலைய போலீசார், குழந்தைகள் பாதுகாப்பு முகாமிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Also Read: அரசு வேலை வாங்கித்தர்றேன்.. ரூ.80 லட்சத்தை சுருட்டிய மோசடி இளைஞர்.. திருச்சியில் பகீர் சம்பவம்

இதற்கிடையில், தற்போது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த ஐந்து வாலிபர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில், ரகுநாதன் என்கிற வாலிபர், சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த  வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோவில் ஐந்து இளைஞர்களும் சிறுமிக்கு பீர் வாங்கிக்கொடுப்பதும் அதன்பின்னர் ஐவரும் கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் மிக மோசமான காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்  சம்பந்தப்பட்ட சிறுமியிடம் குழந்தைகள் பாதுகாப்பு சிறப்பு முகாமில் உள்ள அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது 5 இளைஞர்கள் தன்னை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்ததை சிறுமி ஒப்புக்கொண்டார்.

Also Read: 77 ஆண்டுகள் கழுத்தில் புல்லட்டுடன் உயிர் வாழும் 95 வயது போர் வீரர்! மருத்துவர்கள் அதிர்ச்சி

அதையடுத்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு முகாமில் இருந்து, முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில், மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு, ரகுநாதன், கணேசன், மணிகண்டன் உள்ளிட்ட மூன்று இளைஞர்களை அதிரடியாக கைது செய்தனர். மேலும், இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த தினேஷ், ராஜகணபதி (எ) சரண் ஆகியோரை கைது செய்தனர்.

Published by:Ramprasath H
First published:

Tags: Crime News, Sexual abuse, Sexual harassment, Trichy