Home /News /trichy /

'தனித் தமிழ்நாடு' வாய்ப்பே இல்லை: பொன்னார் திட்டவட்டம்

'தனித் தமிழ்நாடு' வாய்ப்பே இல்லை: பொன்னார் திட்டவட்டம்

முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்

முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்

தமிழகத்தை மூன்றாக பிரித்து மூன்று முதல்வர்களை அமைப்போம்' என்று இங்கு ஒரு தொண்டர் பேசினார். ஆனால், அதையும் கூட பிரிக்க நாங்கள் விடமாட்டோம். ஏனெனில், இது நரேந்திர மோடி ஆட்சி என பொன் ராதாகிருஷ்ணன் திருச்சியில் பாஜக சார்பில் நடந்த உண்னாவிரத போராட்டத்தில் பேசினார்.

மேலும் படிக்கவும் ...
தமிழக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து, பாஜக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டங்கள் நேற்று நடைபெற்றன. சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில், மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். அதேபோல் திருச்சி  கண்டோன்ட்மென்ட் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் ராஜசேகரன் உட்பட, 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

உண்ணாவிரதப் போராட்டத்தின் நிறைவில் பொன். ராதாகிருஷ்ணன் பேசியதாவது, ”தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்: தர்மமே மறுபடியும் வெல்லும்' என்ற கிருஷ்ணனின் கீதாச்சாரம் போல இங்குள்ள தொண்டர்கள் பே‌சினர்.
நவோதயா பள்ளிக்கூடம் தமிழகத்தில் இல்லை. ஆனால் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிக்கூடங்களில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் தவம் இருந்து வருகின்றனர்.

பிரதமர் மோடி ஆட்சியில், ஸ்மிருதி இராணி கல்வி அமைச்சராக இருக்கும் போது, 60 நவோதயா பள்ளிக்கூடங்களை புதிதாக துவக்க இருந்தனர். அப்போதைய முதல்வராக ஜெயலலிதா இருந்தார். ஆனால், சில காரணங்களால் இங்கு செயல்படுத்தப்படவில்லை.

தமிழிலே, 47,000 மாணவர்கள் தேர்ச்சிப் பெறவில்லை. ஆனால் பிரதமர் மோடியோ, 'தமிழ் மொழியை உலகம் போற்றும் மொழி என்றும், எல்லா மொழிக்கும் குறிப்பாக சமஸ்கிருத்திற்கும் தாய்' என்றும் குறிப்பிட்டு பேசுகிறார். அப்படிப்பட்ட மொழியில் மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர். இதற்கான விளக்கத்தை தமிழக முதல்வர் அளிக்க வேண்டும்.

உங்களை (திமுக அரசை) அரியணையில் ஏற்றிய மூதறிஞர் ராஜாஜி,  கெஞ்சினார். 'தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டாம்' என்று. ஆனால் அதையும் மீறி கருணாநிதி திறந்தார். தற்போது, பள்ளிகளுக்கு அருகேயே கோகைன் எனப்படும் போதைப்பொருள் விற்கப்படுகிறது.

Also see...சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்த தமிழிசை

தமிழர்களின் வேலை பறிபோகிறது. வெளி மாநிலத்தவர்கள் இங்கு வந்து விவசாயம் கூட செய்கின்றனர். 'அடைந்தால் திராவிட நாடு; இல்லையெனில் சுடுகாடு' என்றனர். ஏன் அவர்கள் சுடுகாட்டுக்கு செல்லவில்லை?. ஏனெனில் அவர்கள் தமிழகத்தை சுடுகாடாக மாற்றி வருகின்றனர்.

ஆ.ராசா, பாராளுமன்ற உறுப்பினர். திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர். தனிநாடு என்பது யார் கொள்கை? திமுக கொள்கையா? தமிழக முதல்வரின் நிலைபாடா? என்பதை அவர் விளக்க வேண்டும்.
தமிழ்நாட்டை பிரிக்க எந்த கொம்பனாலும் முடியாது. உயிரை கொடுத்தேனும் இந்நாட்டை காப்போம்.

'தமிழகத்தை மூன்றாக பிரித்து மூன்று முதல்வர்களை அமைப்போம்' என்று இங்கு ஒரு தொண்டர் பேசினார். ஆனால், அதையும் கூட பிரிக்க நாங்கள் விடமாட்டோம். ஏனெனில், இது நரேந்திர மோடி ஆட்சி. தனித் தமிழ்நாடு என்று கேட்டால், 8 கோடி தமிழன் உங்களை மிதித்து தள்ளுவான், உங்களுக்கு இங்கு இடமில்லை என்று" இவ்வாறு பேசினார்.

 
Published by:Vaijayanthi S
First published:

Tags: BJP, Ponradhakrishnan, Protest

அடுத்த செய்தி