Home /News /trichy /

திருச்சி விமான நிலையத்தில் மதிமுகவுடன் மோதல்... நாம் தமிழர் கட்சி சீமான் விடுதலை

திருச்சி விமான நிலையத்தில் மதிமுகவுடன் மோதல்... நாம் தமிழர் கட்சி சீமான் விடுதலை

சீமான் விடுதலை

சீமான் விடுதலை

Tiruchirappalli | திருச்சியில் மதிமுகவினருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் நடைபெற்ற மோதல் குறித்து, ம.தி.மு.க.,வினர் தொடுத்த வழக்கிலிருந்து சீமான் விடுதலை செய்யப்பட்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India
கடந்த, 2018ம் ஆண்டு, திருச்சி விமான நிலையத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவும் வந்த போது, அவர்களை வரவேற்க வந்த இரு கட்சித் தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில், ம.தி.மு.க.,வை சேர்ந்த இருவர் காயமடைந்தனர். இது தொடர்பாக காவல் துறை ஒரு வழக்கு பதிவுச் செய்தது. மேலும், காயம்பட்ட ம.தி.மு.க.,வினர் கொடுத்த புகாரின் பேரில் ஒரு வழக்கும் பதிவுச் செய்யப்பட்டது. இந்த இரண்டு வழக்கின் விசாரணையும், திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்- 6 நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் நடைபெற்றது.

Also see...அதிமுக பொதுக்குழுவை இணைந்து கூட்டுவது நடக்காது

இந்த இரு வழக்கும் கடந்த, 18ம் தேதி விசாரிக்கப்பட்ட நிலையில், ம.தி.மு.கவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கு இன்று (25ம் தேதி) மீண்டும் விசாரிக்கப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.அதன்படி, சீமான், சாட்டை துரைமுருகன், பிரபு உள்ளிட்டோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி, ம.தி.மு.கவினர் சமரசம் செய்து கொண்டதால், சீமான் உள்ளிட்டோரை வழக்கிலிருந்து விடுதலை செய்து உத்தரவிட்டார்.

இந்த ஒரு வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட சீமான், காவல்துறை தொடுத்த வழக்கில் அடுத்த மாதம் ஆஜராக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: MDMK, Naam Tamilar katchi, Seeman, Trichy, Trichy Airport

அடுத்த செய்தி