Home /News /trichy /

திருச்சியில் ரசிகர்கள் மீது தாக்குதல்.. வருத்தம் தெரிவித்த விக்ரம்

திருச்சியில் ரசிகர்கள் மீது தாக்குதல்.. வருத்தம் தெரிவித்த விக்ரம்

விக்ரம்

விக்ரம்

Actor Vikram: சில விரும்பதகா சூழல் ஏற்பட்டதாக என் கவனத்திற்கு வந்துள்ளது, அத்தகைய நிகழ்விற்கும், அசௌகர்யத்திற்கும் என் வருத்தத்தை பதிவு செய்து கொள்கிறேன்- நடிகர் விக்ரம்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India
    கோப்ரா படத்தின் ப்ரோமோசனுக்காக திருச்சி சென்ற நடிகர் விக்ரமை காண குவிந்த ரசிகர்கள் மீது விமான நிலையத்தில் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்திய நிலையில் இந்த சம்பவத்துக்கு விக்ரம் வருத்தம் தெரிவித்துள்ளார்.

    நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கோப்ரா'. இப்படம் விநாயகர் சதுர்த்தி நாளான வரும் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது, திரைப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். படத்தின் புரமோஷனுக்காக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் ரசிகர்களை சந்தித்து நடிகர் விக்ரம் உரையாடி வருகிறார்.

    அதில் ஒரு பகுதியாக, திருச்சி ஜோசப் கல்லூரியில் மாணவர்களுடன் நடிகர் விக்ரம் உரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக, இந்நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு நடிகர் விக்ரம் சென்றார். விமான நிலையத்தில் அவரை வரவேற்க நூற்றுக் கணக்கான ரசிகர்கள் கூடியிருந்தனர்.

    அப்போது, நடிகர் விக்ரம் விமான நிலையத்துக்கு வந்ததும் ஆர்வ மிகுதியால் ரசிகர்கள், பாதுகாப்பு படை வீரர்களை தாண்டி விமான நிலையத்திற்குள் செல்ல ஆரம்பித்தனர்.இதனால் அங்கிருந்த மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்கள் விக்ரம் ரசிகர்கள் மீது லேசான தடியடி நடத்தியும், கால்களால் எட்டி உதைத்தும் கூட்டத்தை கலைத்தனர்.



    இந்த சம்பவத்துக்கு நடிகர் விக்ரம் வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், இன்று கோப்ரா திரைப்பட முன்னோட்ட நிகழ்விற்கு திருச்சி வந்த என்னை, வார்த்தைகளால் விவரிக்க இயலா வண்ணம் அன்பு மழையில் நனைய வைத்த என் ரசிகர்களுக்கு என்றும் அன்புக்கு உரித்தானவனாய் என் இதயம் கனிந்த நன்றிகள்.

    இதையும் படிங்க: நடிகர் விக்ரமை காண முண்டியடித்த ரசிகர்கள் மீது தாக்குதல்.. திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு

    அதே வேளையில் சில விரும்பதகா சூழல் ஏற்பட்டதாக என் கவனத்திற்கு வந்துள்ளது, அத்தகைய நிகழ்விற்கும், அசௌகர்யத்திற்கும் என் வருத்தத்தை பதிவு செய்து கொள்கிறேன். இங்கு இவரை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்” என குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Actor Vikram, Fans, Trichy Airport

    அடுத்த செய்தி