Home /News /trichy /

காவிரி ஆற்றை காப்பாற்ற களமிறங்கிய விஞ்ஞானி... திருச்சி கலெக்டரின் அதிரடி நடவடிக்கை

காவிரி ஆற்றை காப்பாற்ற களமிறங்கிய விஞ்ஞானி... திருச்சி கலெக்டரின் அதிரடி நடவடிக்கை

காவிரியை காப்பாற்ற களமிறங்கிய விஞ்ஞானி

காவிரியை காப்பாற்ற களமிறங்கிய விஞ்ஞானி

Tiruchirappalli | திருச்சி மாநகரத்தில் குவியும் குப்பைகள், ஹோட்டல் கழிவுகள் உள்ளிட்ட திடக்கழிவுகள், மாநகரத்தின் சுத்தத்திற்கும், சுகாதாரத்திற்கும் பெரும் சவாலாக விளங்கி வருகிறது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India
திருச்சி மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும்,  டெல்டா மாவட்டங்களில் பாசன தேவைக்காகவும் பயன்படுவது காவிரி ஆறு. திருச்சி மாநகரத்தின் வழியாக பயணிக்கும் காவிரி ஆற்றின் பல இடங்களில் கழிவுநீர் கலந்து காவிரியை மாசுப்படுத்தி வருகின்றன.

மேலும், திருச்சி மாநகரத்திற்குள் ஓடும் உய்யக்கொண்டான் வாய்க்கால், அரியாறு, கோரையாறு குடமுருட்டி ஆறுகளிலும் கழிவுநீர் கலந்து வருகின்றன. இதனால், குடிநீர் மாசடைவதோடு நிலத்தடி நீரும் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதைத்தவிர, மாநகரத்தில் குவியும் குப்பைகள், ஹோட்டல் கழிவுகள் உள்ளிட்ட திடக்கழிவுகள், மாநகரத்தின் சுத்தத்திற்கும், சுகாதாரத்திற்கும் பெரும் சவாலாக விளங்கி வருகிறது.

இப்பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் அவர்களின் வேண்டுகோளை ஏற்று, சென்னையை சேர்ந்த அணு விஞ்ஞானி பேராசிரியர் டேனியல் செல்லப்பா இன்று திருச்சி வந்தார்.

Also see... காட்டெருமையை வேட்டையாடி வீட்டில் தோரணமாக தொங்கவிட்ட இளைஞர்கள்

திருச்சி மேலச்சிந்தாமணி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காவிரி உள்ளிட்ட நீர் நிலைகளில் கழிவுநீர் கலக்கும் இடங்களை நேரில் பார்வையிட்டார். மேலும், திடக்கழிவுகள் சேகரிக்கப்படும் இடங்களிலும் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

திருச்சி மேலச்சிந்தாமணி பகுதியில் கழிவுநீர் காவிரியில் கலக்கும் பகுதியை பார்வையிட்ட பேராசிரியர் டேனியல் செல்லப்பா, செய்தியாளர்களிடம் கூறியபோது, "திருச்சி மாநகரத்திற்கு காவிரி ஆறு என்பது மிகப்பெரிய வரம். இந்த ஆற்றை காப்பாற்ற வேண்டியது நமது அனைவரின் மிகப்பெரிய கடமை.

வருங்கால சமுதாயத்திற்கு இந்த ஆற்றை நல்லபடியாக பாதுகாத்துக் கொடுக்க வேண்டும். எனவே, காவிரி உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்.
மேலும், அந்த கழிவுநீரை சுத்திகரித்து ஆற்றில் விடுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நேரில் ஆய்வு செய்துள்ளேன்.

இதுகுறித்த விரிவான அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கையாக தாக்கல் செய்ய உள்ளேன். வரும் செப். 5ம் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் இது குறித்து விரிவாக விவாதிக்கப்படும்.

முதற்கட்ட ஆய்வுப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் எவ்வளவு நாளுக்குள் இந்த பணிகள் முடிக்கப்படும் என்பது மாவட்ட ஆட்சியரிடம் கலந்து ஆலோசித்த பிறகுதான் தெரிய வரும்" என்றார்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Cauvery River, District collectors, Trichy

அடுத்த செய்தி