முகப்பு /செய்தி /திருச்சி / எலிக்காக வைக்கப்பட்ட மின்சாரம்.. வயலுக்குச் சென்ற சிறுவன் பரிதாப பலி.. திருச்சியில் சோகம்!

எலிக்காக வைக்கப்பட்ட மின்சாரம்.. வயலுக்குச் சென்ற சிறுவன் பரிதாப பலி.. திருச்சியில் சோகம்!

உயிரிழந்த மாணவர்

உயிரிழந்த மாணவர்

மணப்பாறை அருகேநெல் வயலில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவர் உயிரிழப்பு.

  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பெருமாம்பட்டியைச் சேர்ந்தவர் சாந்தகுமார். இவருக்கு வயது 17. இவர் 12 ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் நெல் வயல் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு எலிக்கு மின்வேலி அமைக்கப்பட்டிருந்தாக கூறப்படும் நிலையில் அந்த மின்வேலியில் சாந்தகுமார் எதிர்பாராத விதமாக சிக்கி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக புத்தானத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also see... சிவகாசி: அம்மன் கோயில் ராஜகோபுரத்தின் மீது திடீரென ஏற்பட்ட தீ... பதறிப்போன கிராம மக்கள்!

எலிக்காக அமைக்கப்பட்ட மின்வேலியில் மாணவன் சிக்கி உயிரிழந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும் மாணவனின் குடும்பத்தினர் அனைவரும் அவரது உடலை கட்டிப்பிடித்து கதறி அழுத காட்சி அந்த பகுதியை சோக மயமாக்கியது.

செய்தியாளர்: ராமன், மணப்பாறை

First published:

Tags: Death, Manaparai, School student