Home /News /trichy /

ஓடும் ரயிலில் விழ இருந்த பெண்ணை நொடியில் காப்பாற்றிய ஆர்.பி.எஃப் காவலர்... வைரலாகும் சிசிடிவி காட்சி...

ஓடும் ரயிலில் விழ இருந்த பெண்ணை நொடியில் காப்பாற்றிய ஆர்.பி.எஃப் காவலர்... வைரலாகும் சிசிடிவி காட்சி...

ரயில்வே ஸ்டேசன்  - சிசிடிவி வீடியோ

ரயில்வே ஸ்டேசன் - சிசிடிவி வீடியோ

Tiruchirappalli | திருச்சி ரயில் நிலைய சந்திப்பில் ஓடும் ரயிலில் ஏற முயன்று, தவறி விழவிருந்த பெண்ணை ரயில்வே பாதுகாப்பு படை வீரர் காப்பாற்றும் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India
திருச்சி ரயில் நிலைய சந்திப்பில், சென்னையில் இருந்து குருவாயூர் செல்லக்கூடிய 'குருவாயூர் எக்ஸ்பிரஸ்' ரயில் மதியம் 2 மணியளவில் 4வது நடைமேடையை வந்தடைந்தது.

பயணிகளை இறக்கி ஏற்றிவிட்டு மீண்டும் ரயில் கிளம்பிய கடைசி நேரத்தில் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தோளில் பையுடன் ஏற முயன்றார்.  அந்த பெண் ஓடும் ரயிலில் படிக்கட்டில் கால் வைத்த உடன் தடுமாறி, பின்பக்கமாக சாய்ந்து விழுந்து, ரயிலுக்கும் தண்டவாளத்திற்க்கும் உள்ள இடைவெளியில் சிக்க இருந்தார்.

இதை கவனித்த திருச்சி ரயில்வே  பாதுகாப்பு படை காவலர் சதீஷ்குமார், கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த பெண்ணை பிடித்து இழுத்து நடைமேடையில் விட்டார்.

Also see... ரூ.38,000க்கும் கீழ் குறைந்த தங்கத்தின் விலை.. எவ்வளவு தெரியுமா?

துரிதமாக செயல்பட்டு பெண்ணின் உயிரை காப்பாற்றிய அக்காவலரை அந்த பெண் உட்பட, அங்கிருந்த பயணிகள் அனைவரும் பெரிதும் பாராட்டினர். அப்போது பதிவான சிசிடிவி காட்சிகள் தற்போது, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Railway, Trichy

அடுத்த செய்தி