முகப்பு /செய்தி /திருச்சி / ராமஜெயம் வாழ்க்கையில் ‘விளையாடிய’ கிரிக்கெட்? எஸ்.ஐ.டி. விசாரணையால் பரபரப்பு

ராமஜெயம் வாழ்க்கையில் ‘விளையாடிய’ கிரிக்கெட்? எஸ்.ஐ.டி. விசாரணையால் பரபரப்பு

ராமஜெயம்

ராமஜெயம்

கிரிக்கெட் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்ட ராமஜெயம், கடந்த, 2016ம் ஆண்டு "திருச்சி லீக்" எனும் பெயரில் மிகப்பெரிய அளவில் கிரிக்கெட் போட்டிகள் நடத்த ஆசைப்பட்டிருக்கிறார்.

  • Last Updated :
  • Tiruchirappalli, India

ராமஜெயம் கொலை வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய் குழுவினர், திருச்சி கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடம் நடத்திய விசாரணையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருச்சியை சேர்ந்த திமுக மூத்த அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமஜெயம், கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது.

தமிழகம் முழுவதும் பிரபலமாக உள்ள, 13 ரவுடிகளை சந்தேகத்திற்கு உரியவர்கள் என்று கருதி, அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனையும் விரைவில் நடத்தவிருக்கிறது.

*கிரிக்கெட் பிரச்னை?*

ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக கிடைக்கும் தகவல்கள் குறித்து உடனுக்குடன் சிறப்பு குழு விசாரிக்கின்றனர். அவ்வகையில் தற்போது, திருச்சியை சேர்ந்த கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடம் சிறப்பு புலனாய்வுக் குழு நடத்திய விசாரணை பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கிரிக்கெட் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்ட ராமஜெயம், கடந்த, 2006ம் ஆண்டு "திருச்சி லீக்" எனும் பெயரில் மிகப்பெரிய அளவில் கிரிக்கெட் போட்டிகள் நடத்த ஆசைப்பட்டிருக்கிறார்.திருச்சி கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடம் பேசி, இருதரப்பினரும் இணைந்து கிரிக்கெட் போட்டி நடத்துவென முடிவெடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: சிசிடிவி காட்சியில் தெரிவது நான் இல்லை' - கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியான சுவாதி பரபரப்பு வாக்குமூலம்!

ஆனால், ராமஜெயத்திற்கு வேண்டிய அணியினரை, திருச்சி கிரிக்கெட் சங்கம் போட்டியில் விளையாட அனுமதிக்கவில்லையாம். மேலும், போட்டியை நடத்தவும் பல தடைகளை ஏற்படுத்தினார்களாம். இறுதியாக, போட்டியையே முழுவதுமாக ரத்து செய்துள்ளனர்.

இதனால், ராமஜெயத்திற்கும், கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனடிப்படையில்,திருச்சி கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடம், ராமஜெயத்திற்கும் அவர்களுக்கும் என்ன பிரச்சனை நடந்தது? என்பது குறித்து சிறப்பு புலனாய்வுக் குழுவினர் துருவி, துருவி விசாரணை நடத்தியுள்ளனர்.

First published:

Tags: Local News, Ramajeyam Murder Case