ஹோம் /நியூஸ் /திருச்சி /

திருச்சி மக்களே உஷார் ... ஆடியோ வெளியிட்டு ஆட்சியர் எச்சரிக்கை!

திருச்சி மக்களே உஷார் ... ஆடியோ வெளியிட்டு ஆட்சியர் எச்சரிக்கை!

மழைநீர்

மழைநீர்

தொடர்மழை இருந்து வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் எச்சைக்கை விடுத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை வடகிழக்கு பருவ மழையை தீவிரமடைய செய்துள்ளது.

இதன் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்களில் மழை துவங்கி, படிப்படியாக மற்ற மாவட்டங்களில் மழை இருக்கும். குறிப்பாக, திருச்சி, தஞ்சை, திருவாரூர் போன்ற டெல்டா மாவட்டங்களில் கனமழை இருக்கும் என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி, இன்று அதிகாலை முதல் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பரவலாக, மிதமான மழை பெய்து வருகிறது.

திருச்சி ஸ்ரீரங்கம், சத்திரம் பேருந்து நிலையம், உறையூர், கண்டோன்மென்ட், சுப்ரமணியபுரம், மத்திய பேருந்து நிலையம் போன்ற பல்வேறு பகுதிகளில் இடைவிடாது மழை பெய்து வருகிறது.

திருச்சி மாநகரப் பகுதிகளை விட, துறையூர், மண்ணச்சநல்லூர், லால்குடி, முசிறி போன்ற புறநகர் பகுதிகளில் மழையின் தீவிரம் சற்று அதிகரித்து காணப்படுகிறது.

Also see... எதிர்கட்சிகள் பற்றி கவலை இல்லை.. மக்கள் திருப்தி - ஸ்டாலின்

ஆட்சியர் எச்சரிக்கை

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தனது குரல் வடிவில் வெளியிட்டுள்ள மழை எச்சரிக்கை அறிவிப்பில், 'தொடர்மழை இருந்து வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

குறிப்பாக, திருச்சி மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களில் அதிகப்படியான நீர் நிரம்பி இருப்பதால், சிறுவர்கள், பள்ளி மாணவர்கள் குளிக்க செல்ல வேண்டாம். இவ்விஷயத்தில் பெற்றோர்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: District collectors, Heavy Rainfall, Trichy