ஹோம் /நியூஸ் /திருச்சி /

களைகட்டும் ஆயுத பூஜை.. செவ்வந்தி பூ விலை 10 மடங்காக அதிகரிப்பு..!

களைகட்டும் ஆயுத பூஜை.. செவ்வந்தி பூ விலை 10 மடங்காக அதிகரிப்பு..!

பூக்கள் விலை அதிகரிப்பு

பூக்கள் விலை அதிகரிப்பு

செவ்வந்தி பூ விலையானது, நாளை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu | Tiruchirappalli | Tiruchirappalli

விஜயதசமி மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு, திருச்சி காந்தி மார்க்கெட் பூச்சந்தையில் பூக்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளன.

தமிழகத்தின் முக்கிய பண்டிகைகளான ஆயுத பூஜை இன்றும், விஜயதசமி  நாளையும் கொண்டாடப்படுகின்றன. இதன் காரணமாக, இன்று அதிகாலை முதல், பூஜைக்கு தேவையான பூக்கள், பழங்கள் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, பூக்களின் வரத்து அதிகமாக இருந்தாலும், பூக்களின் விலையும் பன்மடங்கு உயர்த்தியே விற்பனை செய்யப்பட்டன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ சம்மங்கி 70 ரூபாய்க்கும், செவ்வந்தி 100 ரூபாய்க்கும், ரோஜா 80 ரூபாய்க்கும், மல்லிகை, முல்லை பூக்கள் 300 ரூபாய்க்கும் விற்பனையானது.

ALSO READ | மக்களிடம் கண்ணியமாக பேச வேண்டும்.. மீறினால் நடவடிக்கை.. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,எம்.பி.க்களுக்கு மு.க. ஸ்டாலின் கண்டிப்பு..!

இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, ஒரு கிலோ மல்லிகைபூ  ரூ. 800, பிச்சிப்பூ ரூ. 500, கோழிக்கொண்டைபூ ரூ.100, முல்லைப் பூ ரூ.800, செவ்வந்தி ரூ.400, கனகாம்பரம் ரூ.2000, பட்டன் ரோஜா ரூ. 250க்கும் விற்பனை செய்யப்பட்டது.

கடந்த வாரத்தில் ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட செவ்வந்தி பூ இன்று, 400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இந்த விலையானது, நாளை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Published by:Anupriyam K
First published:

Tags: Flower Carpet, Gandhi Market, Trichy