திருச்சி மாவட்டம் மணப்பாறை துணை மின் நிலையத்தில் நாளை (17-12-2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.
இதனால் பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு தேவையான ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, கீழ்கண்ட பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை செய்யப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மின் தடை பகுதிகள்:
மணப்பாறை நகரம், செவலூர், பொடங்குப்பட்டி, பொய்கைப்பட்டி, வீரப்பூர், கொட்டப்பட்டி, தீராம்பட்டி, பொத்தமேட்டுபட்டி, மஞ்சம்பட்டி, வேங்கைக்குறிச்சி, மலையடிப்பட்டி, பூசாரிபட்டி, ஆண்டவர்கோவில், கள்ளிப்பட்டி, முத்தப்புடையான்பட்டி, காட்டுப்பட்டி, புதியகாலனி, மில்பழையகாலனி, மணப்பாறைபட்டி, கல்பாளையத்தான்பட்டி, கீழபொய்கைப்பட்டி, கஸ்தூரிப்பட்டி, வடுகபட்டி ஆகிய இடங்களில் மின் வினியோம் இருக்காது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதேபோல ராயம்பட்டி, வலையபட்டி, எப்.கீழையூர், சின்னமணப்பட்டி, கே.பெரியபட்டி, வடக்குசேர்பட்டி, இடையபட்டி, மரவனூர், சமுத்திரம், தாதநாயக்கன்பட்டி, கத்திக்காரன்பட்டி, சித்தகுடிப்பட்டி, களத்துப்பட்டி, ஆளிப்பட்டி, தொப்பம்பட்டி, குதிரைகுத்திப்பட்டி, படுகளம் பூசாரிபட்டி, கரும்புளிப்பட்டி, அமயபுரம், குளத்தூராம்பட்டி, கூடத்திப்பட்டி, ஆணையூர், பன்னாங்கொம்பு, கருப்பகோவில்பட்டி, பெருமாம்பட்டி ஆகிய இடங்களிலும் மின் தடை ஏற்படும்.
Must Read : கன்னியாகுமரியில் பார்த்து ரசிக்க வேண்டிய பிரமிப்பூட்டும் அழகான சுற்றுலா தலம் - மாத்தூர் தொட்டிப்பாலம்
மேலும், ஈச்சம்பட்டி, அமயபுரம், பண்ணபட்டி, தாதமலைப்பட்டி, ஆமணக்கம்பட்டி, கன்னிவடுகபட்டி, வீராகோவில்பட்டி, பாலகருதம்பட்டி, ராயம்பட்டி, ரெங்ககவுண்டம்பட்டி, வடுகபட்டி (வீட்டு வசதி வாரிய குடியிருப்பு), வேங்கைகுறிச்சி, மணப்பாறைப்பட்டி பொன்னக்கோன்பட்டி, மலையடிப்பட்டி (குடிநீர் பீடர்) வெள்ளை பூலாம்பட்டி, கரட்டுப்பட்டி, பிச்சை மணியாரம்பட்டி, ஆவாரம்பட்டி, புங்கம்பட்டி, ஆலத்தூர், பாம்பாட்டிப்பட்டி, செட்டியபட்டி, ம.துலுக்கம்பட்டி காட்டுப்பட்டி மற்றும் முள்ளிப்பாடி ஆகிய இடங்களிலும் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Power cut, Power Shutdown, Trichy