திருச்சி மாவட்டம் அளுந்தூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடப்பதால் இந்த பகுதியில் மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று திருச்சி மன்னார்புரம் செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.
இங்கே, மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதனால் பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Must Read : “ஊரே சேர்ந்து திருப்பதிக்கு போயிருக்கு..” எல்லா வீட்லயும் பூட்டு - இப்படி ஒரு ஊரா?
மின் தடை பகுதிகள்:
அதன்படி அளுந்தூர், சேதுராபட்டி, பாத்திமாநகர், சூராவளிபட்டி, குஜிலியம்பட்டி, யாகபுடையான்பட்டி, கொட்டப்பட்டு, குமரப்பட்டி, களிமங்கலம், குன்னத்தூர், பிடாரம்பட்டி, சூரகுடிபட்டி, இ.மேட்டுப்பட்டி, மேலபச்சகுடி, அரசு கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, ஐ.ஐ.ஐ.டி. மற்றும் பள்ளபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோம் இருக்காது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Power cut, Power Shutdown, Trichy