முகப்பு /செய்தி /திருச்சி / திருச்சி மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின் தடை - இதில் உங்கள் ஏரியா இருக்கா?

திருச்சி மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின் தடை - இதில் உங்கள் ஏரியா இருக்கா?

மின் தடை

மின் தடை

Trichy District | திருச்சி மாவட்டத்தில் நாளை (வியாழக் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • Local18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் நாளை (15-12-2022) மின் தடை ஏற்படும் என்றும், அதன் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

இதனால் மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

எனவே பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மின் தடை பகுதிகள்:

புலியூர், தாயனூர், புங்கனூர், இனியனூர், சோமரசம்பேட்டை, குழுமணி, வயலூர், நாச்சிக்குறிச்சி, முள்ளிகரும்பூர், எட்டரை, கொப்பு, ஆல்துறை, பெரிய கருப்பூர் மற்றும் மல்லியம்பத்து ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

Must Read : கிரக தோஷங்கள் நீங்க விழுப்புரத்தில் வழிபட வேண்டிய திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோவில் - சிறப்புகள் என்ன?

இதேபோல, மலைக் கோட்டை பிரிவுக்கு உட்பட்ட கீழ தேவதானம், இ.பி.சாலை, பட்டவொர்த் சாலை, கீழ ஆண்டாள் வீதி, சங்கரன் பிள்ளை தெரு, தேவதானம் பகுதி, மற்றும் டவுன் ஸ்டேஷன் ஆகிய பகுதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 4 மணிவரை மின் வினியோகம் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Trichy