Home /News /trichy /

‘நாடோடிகள்’ பட பாணியில் நடிகர் அஜித்துக்கு போஸ்டர்! - திருச்சி ரசிகர்கள் வெறித்தனம்.. பொதுமக்கள் வியப்பு

‘நாடோடிகள்’ பட பாணியில் நடிகர் அஜித்துக்கு போஸ்டர்! - திருச்சி ரசிகர்கள் வெறித்தனம்.. பொதுமக்கள் வியப்பு

அஜித் போஸ்டர்

அஜித் போஸ்டர்

Ajith Poster : நாடோடிகள் பட பாணியில் திருச்சியில் நடிகர. அஜித்குமார் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்களை கண்டு பொதுமக்கள் வியப்படைந்துள்ளனர்.

‘நாடோடிகள்’  திரைப்படத்தில் வில்லன் போல சித்தரிக்கப்படும் ஒரு காமெடி நடிகர், தன்னை தானே விளம்பரப்படுத்திக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுவார். அவரை பற்றி தெரிந்தும், வேறு வழியில்லாமல் படத்தின் கதாநாயகனும் அவரது நண்பர்களும், அவரது வீட்டிற்குள் சென்று உதவி கேட்பார்கள்.

அவரும் பெருந்தன்மையுடன் உதவுவதாக ஒப்புக் கொள்வார். வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தால்,  இவர்களுக்கு உதவி செய்ததை வாழ்த்தி பிரம்மாண்டமான ப்ளக்ஸ் பேனர் இருக்கும். அதைக் கண்டு கதாநாயகனும், அவரது நண்பர்களும் அதிர்ச்சியில் உறைந்து போவார்கள். இதுபோன்ற ஒரு சம்பவத்தை திருச்சியில் அரங்கேற்றி, ஆச்சரியத்தை கூட்டி உள்ளனர் நடிகர் அஜித்குமார் ரசிகர்கள்.

திருச்சி மாவட்ட ரைபிள் கிளப் சார்பில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் பெருத்த ஆர்வம் காட்டும், ‘தல’ என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் அஜித்குமார் ரகசியமாக திருச்சிக்கு வந்து போட்டியில் பங்கேற்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால், விஷயம் மெல்ல மெல்ல கசிந்து அவர் ரைபிள் கிளப்பில் இருப்பது ரசிகர்களுக்கு தெரியவந்தது. உடனே நூற்றுக்கணக்கான ரசிகர்கள் ரைபிள் கிளப் முன்பு கூடினர். நேரம் ஆக ஆக, அவர்களது கூட்டமும், ஆர்வமும் அதிகரித்துக் கொண்டு சென்றது. அவர்களை அமைதிப்படுத்தும் விதத்தில், மாடியில் காட்சியளித்த அஜித்குமார், அவர்களுக்கு கையசைத்துவிட்டு திரும்பிச் சென்று விட்டார்.

Must Read : தாலிச் செயினை பறிக்க முடியாததால் ஆசிரியையை பைக்குடன் எட்டி உதைத்த திருடர்கள் - திருவாரூரில் அதிர்ச்சி சம்பவம்

நேற்று மதியம் நடந்த இந்த நிகழ்வில், அடுத்த அரைமணி நேரத்திற்குள் அவர் இரண்டு கைகளையும் தூக்கி ‘தம்ஸ் அப்’ காட்டும் போட்டோவுடன் கூடிய போஸ்டர்கள், ரைபிள் கிளப் அமைந்துள்ள, திருச்சி கே.கே.நகர், மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமாக ஒட்டப்பட்டுள்ளன.

இதைக் கண்ட திருச்சி மாநகர மக்கள் ‘இப்பதான் அஜித் வந்தாருன்னு சொன்னாங்க.. அதுக்குள்ளே போஸ்டராகவே அடிச்சு ஒட்டிட்டாங்களா..!” என்று வாயடைத்து போயினர்.
Published by:Suresh V
First published:

Tags: Actor Ajith, Ajith, Poster, Trichy

அடுத்த செய்தி