ஹோம் /நியூஸ் /திருச்சி /

ஈபிஎஸ் கைதை கண்டித்து திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது

ஈபிஎஸ் கைதை கண்டித்து திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது

அதிமுக ஆர்ப்பாட்டம்

அதிமுக ஆர்ப்பாட்டம்

Tiruchirappalli | திருச்சியில், ஆர்பாட்டத்தில் மட்டுமே ஈடுபட்ட அதிமுகவினரை போலீசார் கைது செய்யாமல் விடுவித்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

சென்னையில், அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து, திருச்சி மாவட்டத்தில் அதிமுகவினர் 10 இடங்களில் சாலை மறியலும், 4 இடங்களில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இவர்களில் 500க்கும் மேற்பட்டோரை  கைது செய்யாமல் விடுவிக்கப்பட்டனர்.

சாலை மறியல் கைது

திருச்சி வடக்கு மாவட்டம் சார்பில், ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு, மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்சோதி தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்கள் பரஞ்சோதி, வளர்மதி உட்பட, 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் பெரியார் சிலை முன்பு, எம்ஜிஆர் இளைஞரணி மாநில இணைச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் அதிமுகவினர் முதலில் ஆர்ப்பாட்டம் செய்தனர். சற்று நேரம் சாலையோரம் ஓய்வெடுத்த பின்னர், மீண்டும் வந்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அதையடுத்து, சீனிவாசன், மாநில அமைப்புச் செயலாளர் ரத்தினவேல் உட்பட, 80க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Also Read : இலவச பேருந்தால் பெண்களுக்கு ரூ.2000 கோடி மிச்சம்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

மறியல் செய்யாமல் கைது

திருச்சி மாநகரம் மற்றும் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் செய்தவர்களை மட்டும் விடுவித்த போலீசார், லால்குடியில் சற்று வித்தியாசமாக செயல்பட்டனர். திருச்சி அதிமுக தெற்கு மாவட்டம் சார்பில், லால்குடி ரவுண்டானா அருகே, மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான குமார் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, 100க்கும் மேற்பட்டோர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் யாரும் சாலை மறியலில் ஈடுபடாமலேயே கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த 3 இடங்களை தவிர மற்ற இடங்களில் யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிட்டத்தக்கது.

Published by:Vaijayanthi S
First published:

Tags: ADMK, Police, Trichy