முகப்பு /செய்தி /திருச்சி / பெரியார் அரசு கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. நடவடிக்கை எடுக்காதது ஏன்? - மாணவர் அமைப்புகள் கேள்வி

பெரியார் அரசு கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. நடவடிக்கை எடுக்காதது ஏன்? - மாணவர் அமைப்புகள் கேள்வி


பெரியார் அரசுக்கல்லூரி

பெரியார் அரசுக்கல்லூரி

திருச்சி பெரியார் அரசுக்கல்லூரியில் ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் முகாந்திரம் உறுதி செய்யப்பட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி காஜாமலை பகுதியில் தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகின்றது.இந்த கல்லூரியில் ஆங்கிலத் துறை பேராசிரியராகவும் ,துணைத் தலைவராக பணியாற்றி வருபவர் 54 வயதான ஜெயக்குமார். இவர், தனது அதிகாரத்தை பயன்படுத்தி கல்லூரி மாணவிகள் மற்றும் ஆராய்ச்சித் துறை மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததாக தொடர் புகார்கள் எழுந்தன.

கடந்த ஆண்டு சில புகார்கள் எழுந்த நிலையில் பேராசிரியர் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தன்மீது நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுத்ததாக தெரிகின்றது. இந்நிலையில், கல்லூரியில் முதுகலை பயிலும் மாணவி ஒருவர், பேராசிரியர் ஜெயக்குமார் மீது கடந்த ஜூன் மாதம் மீண்டும் ஒரு பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து புகார் ஒன்றை கல்லூரி முதல்வர் சுகந்தியிடம் கொடுத்துள்ளார்.

ALSO READ |  தமிழ்க் கடல் நெல்லை கண்ணன் காலமானார்

 கல்லூரி முதல்வரும் நடவடிக்கை எடுக்காத நிலையில், முதலமைச்சர் தனிப்பிரிவு, கல்லூரிக் கல்வி இயக்குனர் மற்றும் உயர்கல்வித்துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு மாணவி தரப்பில் புகார் அனுப்ப்பட்டுள்ளது. அதையடுத்து இந்த விவகாரம் குறித்து முழுமையாக விசாரணை செய்ய கல்லூரி நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டது.

கடந்த ஜூலை 23ம் தேதி கல்லூரி சார்பாக விசாரணைகுழு அமைக்கப்பட்டு, ஜூலை 25ம் தேதி முழுமையான அறிக்கை தயார் செய்து, கல்லூரிக் கல்வி இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கையில் மாணவியின் குற்றச்சாட்டு நிறுபிக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது.

இந்நிலையில் பேராசிரியர் ஜெயக்குமார் தனக்கு இருக்கும் ஜாதிய பின்னணி பலத்தை பயன்படுத்தி கல்லூரி நிர்வாகத்தை மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது.

top videos

    அத்துடன் விசாரணை அறிக்கை முடித்து கொடுக்கப்பட்டு ஒரு மாதம் ஆகியும் இதுவரை ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று சில மாணவர் அமைப்புகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    First published:

    Tags: Periyar, Sexual harassment, Trichy