ஹோம் /நியூஸ் /திருச்சி /

வரைமுறையில்லாமல் மணல் எடுக்குறாங்க.. லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

வரைமுறையில்லாமல் மணல் எடுக்குறாங்க.. லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

மணல் லாரி - மக்கள் போராட்டம்

மணல் லாரி - மக்கள் போராட்டம்

Tiruchirappalli | திருச்சி மாவட்டம் உத்தமர்சீலி அருகே கொள்ளிடம் ஆற்றங்கரையில் 'ஸ்டாக் பாயிண்ட்' ஆக பயன்படுத்த வேண்டிய இடத்தில் மணல் அள்ளிய லாரிகளை ஊர்மக்கள் சிறைபிடித்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை லால்குடி அருகே கூகூர் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி செயல்பட அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. அங்கு மணல் அள்ளி, உத்தமர்சீலி அருகே உள்ள 'ஸ்டாக் பாயிண்ட்'டில் வைத்து விற்பனை செய்யப்பட்டது. கடந்த சில வாரத்திற்கு முன்பு கொள்ளிடம் ஆற்றில் வந்த பெருவெள்ளம் காரணமாக ஆற்றின் உள்ளே போடப்பட்டிருந்த மண் சாலைகள் அனைத்தும் அடித்து செல்லப்பட்டன.

இதனால், கூகூர் மணல் குவாரியில் மணல் எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது. அதையடுத்து தற்போது 'ஸ்டாக் பாயிண்ட்' ஆக பயன்படுத்த வேண்டிய இடத்தில் இருந்து, மணல் அள்ளுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, தினந்தோறும் அதிகாலை, 5 மணி முதல், இரவு 10 மணி வரை, மணல் தொடர்ந்து எடுக்கப்பட்டு ஆயிரக்கணக்கான லாரிகளில் ஏற்றப்படுகின்றன.

மக்கள் அவதி

வரைமுறையில்லாமல் மணல் எடுப்பதால் விவசாயம் பாதிக்கும். மணல் லாரிகள் போக்குவரத்தால், அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள், மாணவர்கள், பொதுமக்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாக மோசமாக பழுதடைந்துள்ளன' என்று இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.

இதுகுறித்து உரிய நடவடிக்கைகள் எடுக்ககாததால் ஆத்திரமடைந்த, உத்தமர்சீலி மற்றும் கிளிக்கூடு கிராமங்களை சேர்ந்த மக்கள் மணல் லாரிகளை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த சமயபுரம் கொள்ளிடம் போலீசார், பொதுமக்களை சமாதானப்படுத்தி, 'இது குறித்து ஸ்ரீரங்கம் தாசில்தார் தலைமையில் ஒரு கூட்டம் நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்று உறுதி அளித்தனர்.

Also see... அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடி...

அதையடுத்து, லாரிகளை விடுவித்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இப்போராட்டத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Protest, Sand, Trichy