Home /News /trichy /

வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் தமிழ் நாட்டிற்கு 5990 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு...

வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் தமிழ் நாட்டிற்கு 5990 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு...

வேளாண் உட்கட்டமைப்பு  நிதி திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு ரூ.5990 கோடி நிதி ஒதுக்கீடு

வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு ரூ.5990 கோடி நிதி ஒதுக்கீடு

Tiruchirappalli | வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ரூ.5990 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    வேளாண் உட்கட்டமைப்பு நிதி கருத்தரங்கம் திருச்சியில் இன்று நடந்தது. இதில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை உரையாற்றினார். அப்போது, ” வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் 12 ஆண்டிற்கு தமிழ்நாட்டிற்கு 5990 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம் 15 முதல் 20 சதவீதம் வரை அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்புகளை குறைக்க முடியும்" என்றார். 

    மேலும், “ இத்திட்டத்தின் மூலம் தொடக்க வேளாண்மை கடன் சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், தொழில் முனைவோர்கள் ஆகியோர் பயன்பெறலாம். இத்திட்டத்தில் ஒரு தனி நபரோ அல்லது நிறுவனமோ அதிகபட்சமாக 2 கோடி ரூபாய் வரை மூன்று சதவீதம் வட்டி குறைப்புடன் கடன் பெறலாம்” என்றும் தெரிவித்தார்.



    இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் வேளாண் உட்கட்டமைப்பு நிதி நிலைமை மற்றும் வாய்ப்புகள் குறித்து வேளாண் உற்பத்தி ஆணையரும், அரசு செயலாளருமான சமய மூர்த்தி பேசினார். கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வேளாண்மை உட்கட்டமைப்பு நிதியின் தாக்கம் குறித்து பேசினார்.

    Also see... க்யூஆர் கோடு’ ஸ்டிக்கரை ஒட்டி நூதன மோசடி செய்த இளைஞர் கைது...

    இதில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குனர் நடராஜன், மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார்,  அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர்: கோவிந்தராஜ், திருச்சி
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Agricultural act, Trichy

    அடுத்த செய்தி