Home /News /trichy /

கழக முன்னோடிகளை பெரியாராக, அண்ணாவாக பார்த்து மகிழ்கிறேன் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு

கழக முன்னோடிகளை பெரியாராக, அண்ணாவாக பார்த்து மகிழ்கிறேன் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு

மணப்பாறையில் பேசிய உதயநிதி

மணப்பாறையில் பேசிய உதயநிதி

Tiruchirappalli | அனைவரும் பாராட்டும் படியான முதல்வராக நம் முதல்வர் உழைத்துக் கொண்டிருக்கிறார் என மணப்பாறை விழாவில் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli | Manapparai
    திருச்சி மாவட்டம், மணப்பாறையில் திருச்சி தெற்கு மாவட்ட திமுகவின் சார்பில், திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்று நான்காம் ஆண்டு நிறைவு விழா, மணப்பாறையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைய உத்தரவிட்ட முதல்வருக்கு நன்றி அறிவித்தல் விழா, கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா, மணப்பாறை ஒன்றிய திமுக அலுவலக கட்டிட அடிக்கல் நாட்டு விழா மற்றும் அகில இந்திய அளவிலான கபடி போட்டி விழா ஆகிய ஐம்பெரும் விழாக்கள் மணப்பாறை அருகே உள்ள தியாகேசர் ஆலை மைதானத்தில் நடைபெற்றது.

    தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடந்த இவ்விழாவில் கலந்து கொண்டு திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கட்சியின் மூத்த முன்னோடிகள் 400 பேருக்கு பொற்கிழிகளை வழங்கியும், திமுக ஒன்றிய அலுவலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.பின்னர் உட்கட்சி தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கினார். முன்னதாக மறைந்த அன்பில் பொய்யாமொழி உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "இந்த ஐம்பெரும்விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். ஏனென்றால் தேர்தல் நேரத்திலே மணப்பாறை தொகுதிக்கு அரசு கலை அறிவியல் கல்லூரி வேண்டும் என்று மக்களின் கோரிக்கை தேர்தல் அறிக்கையிலும் இடம் பெற்றிருந்தது. தேர்தலில் வென்ற பின் முதல்வர் தற்போது மணப்பாறைக்கு அரசு கலை அறிவியல் கல்லூரி கொடுத்துள்ளார். ஆகவே அந்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டு உங்கள் முன்னாள் நின்று பேசுகின்றேன்.

    நான் பெரியாரையோ, அண்ணாவையோ பார்த்ததில்லை. ஆனால் கலைஞரை பார்த்திருக்கின்றேன். இங்கு வந்திருக்கும் கழக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கப்படுகின்றது. இந்த மூத்த முன்னோடிகளை நான் பெரியாராக, அண்ணாவாக, கலைஞராக பார்த்து மகிழ்கின்றேன். இந்த கழக வெற்றி என்பது உங்களால் தான் சாத்தியமானது. ஆகவே இந்த நேரத்தில் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    கழக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்று 5 வது ஆண்டு தொடங்கியுள்ள நிலையில் அவர் தொட்டதெல்லாம் வெற்றியாகவே அமைந்திருக்கின்றது. 2019 பாராளுமன்ற தேர்தல், அதன் பின் சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் இப்படி அனைத்திலும் கழகம் வெற்றி பெற்றிருக்கின்றது. நம்பிக்கை வைத்து வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களின் நம்பிக்கைக்கு உரியவராக அனைவரும் பாராட்டும் படியான முதல்வராக நம் முதல்வர் உழைத்துக் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

    அவருடன் அமைச்சர்களும் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்கின்றனர். மணப்பாறை ஒன்றிய தி.மு.க அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டி உள்ளேன். இதை ஒரு முன்மாதிரியாக வைத்துக் கொண்டு தமிழகம் முழுவதும் அனைத்து ஒன்றியங்களிலும் தி.மு.க அலுவலகம் அமைக்க வேண்டும்” என்று கூறினார்.

    Also see... சேலத்தில் அரசு பொருட்காட்சி தொடங்கியது...

    விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, மெய்யநாதன், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, திருச்சி மாநகர மேயர் அன்பழகன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி நிர்வாகிகள், கட்சியினர் ஆயிரக்கணக்கானோர் திரளாக கலந்து கொண்டனர்.

    செய்தியாளர்: ராமன் மணப்பாறை
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: CM MK Stalin, DMK, Manapparai, Trichy, Udhayanidhi Stalin

    அடுத்த செய்தி