ஹோம் /நியூஸ் /திருச்சி /

அடுக்குமாடி குடியிருப்பில் மூதாட்டி கழுத்தறுத்து கொலை.. நகைகள் கொள்ளை.. திருச்சியில் பகீர் சம்பவம்

அடுக்குமாடி குடியிருப்பில் மூதாட்டி கழுத்தறுத்து கொலை.. நகைகள் கொள்ளை.. திருச்சியில் பகீர் சம்பவம்

கொலையான மூதாட்டி. நகைகள்(ஃபைல் படம்)

கொலையான மூதாட்டி. நகைகள்(ஃபைல் படம்)

Trichy Murder : திருச்சி அருகே அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த மூதாட்டி கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டு வீட்டிலிருந்த நகைகள் திருடுபோன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூரில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசித்து  வந்தவர் ராதா(70), இவரது கணவர் வேலாயுதம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். ராதாவிற்கு ரஜினி(42) என்ற மகன் உள்ளார்.  வீட்டில் ராதா மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார்இந்நிலையில், ராதாவிற்கு மகன் ரஜினி செல்போனில் தொடர்பு கொண்டு பேச முயன்றார். ஆனால் நீண்ட நேரமாக செல்போனை ராதா எடுக்காத காரணத்தால்  சந்தேகம் அடைந்த ரஜினி பக்கத்து வீட்டில் வசிக்கும் நபரிடம் இதுகுறித்து கூறியுள்ளார்.

இதையடுத்து பக்கத்து வீட்டில் இருந்த நபர் ராதா வீட்டிற்கு சென்று பூட்டி இருந்த கதவை தட்டி உள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாமல் இருந்தது. இதனால்  சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டுக்காரர் உடனடியாக ரஜினிக்கு போன் செய்து தங்களுடைய அம்மா கதவை திறக்கவில்லை என்று கூறினார்.இதனால் பதட்டமடைந்த ரஜினி வீட்டுக்கு வந்து தான் வைத்திருந்த சாவியை வைத்து வீட்டை திறந்து பார்த்தபோது வீட்டுக்குள் ராதா கழுத்து, காது அறுபட்டு  சடலமாக கிடந்துள்ளார். மேலும் அவர் அணிந்திருந்த நகைகள் காணவில்லை.

இதையும் படிங்க : 'எரிந்த உடலோடு அலறியடித்து ஓடி வந்த இளம்பெண்.. காதலிக்கு தீ வைத்த காதலன்.. பல்லடம் அருகே கொடூர சம்பவம்!

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரஜினி இந்த சம்பவம் குறித்து  உடனடியாக ஜீயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி ஜீயபுரம் டிஎஸ்பி பாரதிதாசன் மற்றும் இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி நடத்தினர். பிறகு ராதா உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகே ராதா எப்படி இறந்தார் என்பது குறித்து முழு விவரம் தெரியவரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை பொறுத்தவரை வீட்டில் ரஜினி உள்ளிட்ட யாரும் இல்லாததை தெரிந்து கொண்ட மர்ம ஆசாமிகள் யாரோ ராதா  வீட்டுக்குள் புகுந்து அவரை கொலை செய்து விட்டு கழுத்தில் அணிந்திருந்த தோடு, வளையல் உள்ளிட்ட 4 பவுன் நகையை திருடிக் கொண்டு சென்றது தெரியவந்தது. மேலும் ராதா வீட்டுக்கு நேற்று யார் வந்தது என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த மூதாட்டி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் முத்தரச்சநல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர்: கோவிந்தராஜ் ( திருச்சி)

First published:

Tags: Crime News, Local News, Trichy