ஹோம் /நியூஸ் /திருச்சி /

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி: டிடிவி தினகரனை சந்தித்து பேசுவேன்’- ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி: டிடிவி தினகரனை சந்தித்து பேசுவேன்’- ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு

ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

"எந்த நோக்கத்திற்காக அ.தி.மு.க சட்ட விதிகளை எம்.ஜி.ஆர் உருவாக்கினாரோ அதில் எந்த மாசும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகதான் தற்போது நடைபெறும் தர்ம யுத்தம்" என்று திருச்சியில் ஓ.பன்னீர் செல்வம் விளக்கமளித்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

’அ.தி.மு.க உடன் கூட்டணி வைக்க தயார்' என்கிற டி.டி.வி தினகரனின் கருத்தை வரவேற்கிறோம். தஞ்சாவூரில் வாய்ப்பு ஏற்பட்டால் அவரை சந்தித்து பேசுவேன்’ என ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

தஞ்சையை சேர்ந்த அ.தி.மு.க., முன்னாள் அரசு கொறடா துரை.கோவிந்தராஜன் காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்த, ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று திருச்சி வந்தார்.

அப்போது திருச்சி விமான நிலையத்தில் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில், அ.தி.மு.க எப்போதும் தொண்டர்களுக்கான இயக்கமாகதான் இருந்திருக்கிறது. தொண்டர்களை எந்த நேரத்திலும் பிளவுப்படுத்தி பார்க்க முடியாத வகையில்தான் நிலைத்து நிற்கிறது. அ.தி.மு.க.,வில் எந்தவித சிறுசேதமும் இல்லை. சிறுசிறு பிரச்சினைகள் இடையில் வரும். அது சரியாக போய்விடும். அனைத்து தொண்டர்களும் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்றார்.

மேலும் அ.தி.மு.க தலைமையில் தான் பிரச்சனை என்கிற மாயத்தோற்றம் உருவாகி உள்ளது. அது போக போக சரியாகி விடும். தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும் அண்ணன் தம்பி இயக்கம் தான். ஆனால், நாங்கள் மாறுப்பட்ட பாதையில் பயணித்து கொண்டு இருக்கிறோம். எங்கள் பாதை எம்.ஜி.ஆர் காட்டிய பாதை. அதில் நாங்கள் பயணிக்கிறோம் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து அதிமுக பிளவுக்கு  பாஜகதான் காரணமா என செய்தியாளர் கேள்விக்கு அளித்த பதிலில், அ.தி.மு.கவின் ஒற்றுமையை பா.ஜ.க குலைக்கவில்லை. அ.தி.மு.க வை யாராலும் மிரட்ட முடியாது. அ.தி.மு.க தொண்டர்களை யாராலும் பிளவுப்படுத்தி பார்க்க முடியாது. அது நடக்கவும் நடக்காது. அளிக்கையில், தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியை வாய்ப்பு கிடைத்தால் சந்திப்போம். அ.தி.மு.க.,வின் இடத்தை பா.ஜ.க பிடிக்க பார்க்கிறது என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை’ என்றார்.

இதையும் படிங்க : எடப்பாடி பழனிசாமி அமைக்கும் மெகா கூட்டணியில் அமமுக...’ - டிடிவி.தினகரன் விளக்கம்!

திமுகவுக்கு எதிரான கூட்டணியில் டிடிவி தினகரனும் இடம்பெறுவாரா என்ற கேள்விக்கு  பதிலளிக்கையில், "அ.தி.மு.க உடன் கூட்டணி வைக்க தயார்' என்கிற டி.டி.வி தினகரனின் கருத்து நல்ல கருத்து. இதை வரவேற்கிறோம். தஞ்சாவூரில் வாய்ப்பு ஏற்பட்டால் அவரை சந்தித்து பேசுவேன். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றியை பெறும்" என்றார்.

மேலும், "கட்சிக்கு ஓபிஎஸ்; ஆட்சிக்கு இபிஎஸ் என்ற பழைய நிலை வந்தால் மீண்டும் ஒன்றாக இணைவீர்களா?" என்ற கேள்விக்கு, "எங்களை பொறுத்தவரை ஜனநாயக ரீதியில் இயக்கம் செயல்பட வேண்டும். வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். அதை தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். எந்த நோக்கத்திற்காக அ.தி.மு.க., சட்ட விதிகளை எம்.ஜி.ஆர். உருவாக்கினாரோ அதில் எந்த மாசும் ஏற்பட்டு விட கூடாது என்பதற்காகதான் தற்போது நடைபெறும் தர்மயுத்தம்" என்று பதிலளித்தார்.

Published by:Lakshmanan G
First published:

Tags: BJP, OPS, TTV Dinakaran