Home /News /trichy /

தமிழகத்தில் வடக்கு ஏகாதிபத்தியம் சமஸ்கிருதத்தை திணிக்கிறது - வைகோ குற்றச்சாட்டு

தமிழகத்தில் வடக்கு ஏகாதிபத்தியம் சமஸ்கிருதத்தை திணிக்கிறது - வைகோ குற்றச்சாட்டு

வைகோ

வைகோ

வடக்கு ஏகாதிபத்தியம், தமிழகத்தில் சமஸ்கிருதத்தை திணிக்கிறது. இந்துத்துவா தத்துவங்களைக் கொண்டு வந்து திணிக்கிறது - வைகோ

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India
திருச்சி குழுமணியில், மதிமுக மாவட்டத் துணைச் செயலாளர் பன்னீர்செல்வம் இல்ல திருமண விழா இன்று நடைபெற்றது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். திருமண விழாவில் வைகோ பேசியதாவது,

“கடந்த, 29 ஆண்டுகளாக கட்சியில் மின்னல் வேகமாக செயலாற்றியவர் ராஜன். அவரது திருமண விழாவில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. தினசரி பத்திரிக்கைகளில் 'கணவன், மனைவியை கொன்றான். மனைவி, கணவனை கொன்றாள்' போன்ற செய்திகள் வருகின்றன.

Also Read : தேசிய கொடியை வழங்கி யாத்திரை தொடங்கி வைத்த ஸ்டாலின்

இதுவா இல்லற வாழ்க்கை?. மணமக்கள் இருவரும் ஒருவருக்கொருவோர் அரவணைத்து வாழ வேண்டும். மருமகள், தங்களது கணவரின் தந்தையை மகளை பார்த்துக் கொள்ள வேண்டும். கணவன்- மனைவி உறவு, 6 மாதம் இனித்து, அடுத்த, 6 மாதத்தில் கசந்து விடுகிறது. பிறகு கோர்ட் வாசலில் சென்று நிற்கின்றனர். அல்லது கொலை செய்கின்றனர்.

கூட்டு குடும்ப வாழ்க்கை தான் சிறப்பாக இருக்கும். தற்போது, திருவள்ளுவரின் நெறி தளர்ந்து போகிறது. வடக்கு ஏகாதிபத்தியம், தமிழகத்தில் சமஸ்கிருதத்தை திணிக்கிறது. இந்துத்துவா தத்துவங்களைக் கொண்டு வந்து திணிக்கிறது. இதை எதிர்த்து அண்ணா பிறந்தநாளன்று சென்னையில் மாநாடு நடைபெற உள்ளது. இதில் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Published by:Raj Kumar
First published:

Tags: Imposing Hindi, Sanskrit, Vaiko

அடுத்த செய்தி