முகப்பு /செய்தி /திருச்சி / நிலத்தகராறு: இயற்கை உபாதையை கழிக்க சென்றபோது இளம்பெண்மீது கொடூர தாக்குதல்... திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்!

நிலத்தகராறு: இயற்கை உபாதையை கழிக்க சென்றபோது இளம்பெண்மீது கொடூர தாக்குதல்... திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்!

மாதிரி படம்

மாதிரி படம்

Trichy News : திருச்சியில் இடத்தகராறில் பெண்ணை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்டம் உத்தமர்சீலி மேலத்தெருவை சேர்ந்தவர் சக்திவேல். டெய்லர். இவரது மனைவி செல்வி (35). மலேசியாவில் வேலை பார்த்த சக்திவேல் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் ஊர் திரும்பியுள்ளார். இவர்களது வீட்டின் அருகில் வசிப்பவர் பரமசிவம். இவருக்கும், சக்திவேலுக்கும் தங்களது இடத்தை அளந்து பிரிப்பது தொடர்பாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை இதே விஷயம் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. அப்போது, அளந்து ஊன்றி வைக்கப்பட்டிருந்த கற்களை எல்லாம் பரமசிவம் குடும்பத்தினர் பிடுங்கி எறிந்ததாக கூறப்படுகிறது.

இதைக்கண்ட செல்வி அவர்களை தட்டிக்கேட்டுள்ளார். இதனால் பரமசிவம் தரப்பு கடும் ஆத்திரமடைந்துள்ளது. இதனால் செல்வி மீது அவர்களுக்கு விரோதம் ஏற்பட்டுள்ளது. அதன்படி நேற்று முன்தினம் இரவு இயற்கை உபாதைக்காக வீட்டின் பின்புறம் சென்ற செல்வியை பரமசிவம், அவரது மகன்கள் சுரேஷ், சப்பாணி, ஜோதிபாசு, பேரன் அவினாஷ் ஆகியோர் சரமாரியாக அடித்து, அவரது மார்பில் மிதித்து அவரை மானபங்கம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த செல்வி, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.

இதுகுறித்து செல்வி கொடுத்த புகாரின்பேரில் சமயபுரம் கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்று செல்வியின் குடும்பத்தின் மீது பலமுறை பரமசிவம் குடும்பத்தினர் தாக்குதல் நடத்தியும், தாக்குதல்கள் குறித்து பலமுறை புகார் கொடுத்தும் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று செல்வியின் குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். இடத்தகராறில் பெண்ணை மானபங்கப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

செய்தியாளர் : விஜயகோபால் - திருச்சி

First published:

Tags: Crime News, Local News, Trichy